வாக்காளர்கள் | : | | 1520276 |
ஆண் | : | | 745617 |
பெண் | : | | 774486 |
திருநங்கை | : | | 173 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. சி.மகேந்திரன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்-377546
2. கு.சண்முகசுந்தரம் - திராவிட முன்னேற்ற கழகம்-550905-வெற்றி
3. மூகாம்பிகா ரத்தினம் - மக்கள் நீதி மய்யம்-59545
4. எஸ்.முத்துக்குமார் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் -26631
5. சனுஜா அன்வர்தீன் - நாம் தமிழர் கட்சி-31399
6. அ.கணேசமூர்த்தி - பகுஜன் சமாஜ் கட்சி-3177
7. எஸ்.அன்சாரி - சுயேச்சை-908
8. கே.என்.சண்முகசுந்தரம் - சுயேச்சை-711
9.வி.சண்முகசுந்தரம் - சுயேச்சை-1271
10. கோ.பாலாஜி - சுயேச்சை-804
11. சி.மாணிக்கவேல் - சுயேச்சை-533
12. சி.முத்துக்குமார் - சுயேச்சை.-943
13. கே.ராமசாமி - சுயேச்சை-2734
14. ஆர்.ஜி.ராஜேந்திரன் - சுயேச்சை-5245
15.நோட்டா-15068
தென்னை விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி 1951–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது பொங்கலூர், தாராபுரம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை (தனி), உடுமலை ஆகிய சட்டசபை தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகு, பொங்கலூர், தாராபுரம் தொகுதிகளுக்கு பதிலாக தொண்டாமுத்தூரும், புதிதாக உருவாக்கப்பட்ட மடத்துக்குளம் தொகுதியும் சேர்க்கப்பட்டன. 1951–ம் ஆண்டு முதல் இதுவரை பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி 16 மக்களவை தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்த தொகுதி அ.தி.மு.க. கோட்டையாகவே விளங்கி வந்துள்ளது. அ.தி.மு.க. 7 முறையும், தி.மு.க., காங்கிரஸ் 3 முறையும், ம.தி.மு.க. 2 முறையும்,
த.மா.கா. ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது.
இந்த நாடாளுமன்ற தொகுதியில் 1951–ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாமோதரனும், 1957–ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.ஆர். ராமகிருஷ்ணனும், 1962–ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.சுப்பிரமணியமும், 1967, 1971–ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க.வை சேர்ந்த நாராயணன் தொடர்ந்து 2 முறையும் வெற்றி வாகை சூடினர். 1977–ம் ஆண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த கே.ஏ.ராஜூவும், 1980–ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த சி.டி.தண்டபாணியும், 1984–ம் ஆண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த ஆர்.அண்ணா நம்பியும், 1989, 1991–ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜா ரவிவர்மா தொடர்ந்து 2 முறையும், 1996–ம் ஆண்டு த.மா.கா.வை சேர்ந்த கந்தசாமியும், 1998–ம் ஆண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த தியாகராஜனும், 1999, 2004–ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் டாக்டர் சி.கிருஷ்ணனும் தொடர்ந்து 2 முறையும் வெற்றி பெற்றனர். 2009–ம் ஆண்டு சுகுமார் (அ.தி.மு.க.) வெற்றி பெற்றார்.
கடைசியாக 2014–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் முதல் முறையாக வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் மகேந்திரன் 4 லட்சத்து
17 ஆயிரத்து 92 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பொங்கலூர் பழனிசாமி (தி.மு.க.) 2 லட்சத்து 51 ஆயிரத்து 829, ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) 2 லட்சத்து
76 ஆயிரத்து 118, செல்வராஜ் (காங்கிரஸ்) 30 ஆயிரத்து
14 வாக்குகளும் பெற்றனர். தற்போது (2019–ம் ஆண்டு) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் சி.மகேந்திரனும் , தி.மு.க. சார்பில் கு.சண்முகசுந்தரமும் களம் இறங்கி உள்ளனர். இருவருக்குமே நேரடி போட்டி என்று கூறலாம். பொள்ளாச்சி தொகுதியில் ஓரளவுக்கு சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஆனால் விவசாயிகளின் நீண்டகால பிரச்சினையான ஆனைமலையாறு–நல்லாறு திட்டம் இன்னும் செயல்படுத்தாத நிலை தான் இருக்கிறது. பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தென்னை விவசாயம், தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் பகுதி ஆகும். இங்கு கடந்த 2011–ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தாழ்த்தப்பட்ட மக்கள் 19.34 சதவீதமும், பழங்குடியினர் 1.02 சதவீதமும், இந்துக்கள்
85 முதல் 90 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 0.5 முதல் 5 சதவீதமும், முஸ்லிம்கள் 5 முதல் 10 சதவீதம் அளவுக்கு வசிக்கின்றனர். 79.81 சதவீத மக்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக கொப்பரை தேங்காய்க்கு கட்டுப்படியான விலை, கிடப்பில் கிடக்கும் ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை தொடங்க நடவடிக்கை, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, வால்பாறையில் வனவிலங்குகளின் பாதிப்புக்கு தீர்வு, மழைக்காலத்தில் தண்ணீர் வீணாகுவதை தடுக்க ஆழியாற்றின் குறுக்கே தடுப்பணை போன்றவை முக்கியமாக உள்ளது. கொப்பரை தேங்காய்க்கு மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன் ஓரளவுக்கு விலை உயர்த்தப்பட்டது சிறிது மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் பொள்ளாச்சியில் மீட்டர்கேஜ் ரெயில் பாதை இருந்த போது இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. பொள்ளாச்சி தனி மாவட்ட கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மேலும் ஒவ்வொரு முறையும் தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சியில் தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் வெற்றி பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:–
மகேந்திரன் (அ.தி.மு.க.)..................................4,17,092
ஈஸ்வரன் (கொ.ம.தே.க.).................................. 2,76,118
பொங்கலூர் பழனிசாமி (தி.மு.க.)..................... 2,51,829
செல்வராஜ் (காங்கிரஸ்).......................................30,014
வெற்றி யார் கையில்?
பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்துள்ளது. கடைசியாக நடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்று அசத்தியது. அந்த வெற்றியை இந்த முறையும் தக்க வைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் களத்தில் இறங்கி உள்ளனர். கடந்த 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை (தனி), கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்று அசுர பலத்துடன் உள்ளது. மடத்துக்குளம் தொகுதியில் மட்டும் தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. ஆளும் கட்சியாக அ.தி.மு.க. இருந்தாலும், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் நடைபெறும் தேர்தலாக உள்ளதால், அதன் பலம் ஓங்குமா? என்கிற கேள்வியும் உள்ளது. ஆகவே இந்த முறை பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க. இடையே கடுமையான போட்டியைத்தான் காண வேண்டி இருக்கும்.
இதற்கிடையில் தற்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகின்றது. இதனால் கடந்த 2 முறை வெற்றி பெற்ற அ.தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெறுவது பெரும் சவாலாக இருக்கலாம்.
2014–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலின் போது பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் இருந்த வாக்காளர்கள் 13,42,736 பேர் ஆகும். தற்போது வாக்காளர்கள் எண்ணிக்கை 1,57,833–ஆக அதிகரித்துள்ளது. ஆகவே புதிய, இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை இந்த தேர்தலில் முத்திரை பதிக்க கூடியதாக அமையும். அந்த முத்திரை யாருக்கு ஒட்டு மொத்த ஓட்டுகளாக போய் சேரும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.பொள்ளாச்சி தொகுதி எம்.பி.யின் கடந்த 5 ஆண்டு செயல்பாடுகள் குறித்து மக்களிடம் கேட்ட போது, இதுவரைக்கும் இருந்தவர்களை விட, இவர் அதிகமாக தொகுதி பக்கம் வந்துள்ளார். சாலை வசதி, திருமண மண்டபம் என அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். ஆனால் மக்கள் குறைகளை தீர்க்க தனியாக முகாம் நடத்தி மனுக்களை வாங்கியதில்லை. இன்னும் தொகுதி மக்களின் பெரும்பாலான குறைகள் நிறைவேற்றப்படவில்லை என்றனர்.
வாக்காளர்கள் எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் 15,00,569 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,36,632, பெண் வாக்காளர்கள் 7,63,777, மூன்றாம் பாலினத்தினர் 160.
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:–
பொள்ளாச்சி..................................2,15,929
வால்பாறை (தனி)...........................1,96,496
கிணத்துக்கடவு ............................ 2,96,645
தொண்டாமுத்தூர்......................... 3,01,653
உடுமலை...................................... 2,54,626
மடத்துக்குளம்............................... 2,35,220
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:–
பொள்ளாச்சி (அ.தி.மு.க. வெற்றி)
பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.)..................78,553
தமிழ்மணி (தி.மு.க.).............................................65,185
நித்தியானந்தன் (கொ.ம.தே.க.).............................7,722
முத்துக்குமார் (தே.மு.தி.க.) ..................................4,893
உமாமகேஸ்வரி (நாம் தமிழர்கட்சி)..........................1,369
வால்பாறை (தனி) (அ.தி.மு.க. வெற்றி)
கஸ்தூரிவாசு (அ.தி.மு.க.)....................................69,980
பால்பாண்டி (தி.மு.க.) ..........................................61,736
மணிபாரதி (இ.கம்யூ) ............................................3,494
முருகேசன் (பா.ஜனதா)..........................................2,565
அன்பழகன் (கொ.ம.தே.க.)....................................1,284
கிணத்துக்கடவு (அ.தி.மு.க. வெற்றி)
எட்டிமடை சண்முகம் (அ.தி.மு.க.).........................89,042
குறிச்சி பிரபாகரன் (தி.மு.க.).................................87,710
முத்துராமலிங்கம் (பா.ஜனதா)..................................11,354
ஈஸ்வரன் (ம.தி.மு.க.)...............................................8,387
செல்வகுமார் (நாம் தமிழர் கட்சி)................................1,946
தொண்டாமுத்தூர் (அ.தி.மு.க. வெற்றி)
எஸ்.பி.வேலுமணி (அ.தி.மு.க.)...................1,09,132
செய்யது முகமது (ம.ம.க.).............................45,084
கருமுத்துதியாகராஜன் (பா.ஜனதா).................18,978
தியாகராஜன் (தே.மு.தி.க.)...............................7,928
அன்சர் ஷெரீப் (எஸ்.டி.பி.ஐ.)..............................3,633
உடுமலை (அ.தி.மு.க. வெற்றி)
உடுமலை ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.)....................81,817
மு.க.முத்து (தி.மு.க.).............................76,130
கந்தசாமி (பா.ஜனதா)...............................7,339
கணேஷ்குமார் (தே.மு.தி.க.).....................7,090
ரகுபதி ராகவன் (சுயேட்சை).......................3,562
மடத்துக்குளம் (தி.மு.க. வெற்றி)
ஜெயராமகிருஷ்ணன் (தி.மு.க.)..................................76,619
மனோகரன் (அ.தி.மு.க.)..............................74,952
மகேஸ்வரி (த.மா.கா.).......................................6,208
முத்துக்குமார் (ஐ.எம்.கே.எம்.கே.).....................2,619
ரவிச்சந்திரன் (பா.ம.க.)..........................2,443