வாக்காளர்கள் | : | | 1174077 |
ஆண் | : | | 572106 |
பெண் | : | | 601893 |
திருநங்கை | : | | 78 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. என்.ஆர்.சிவபதி - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்-280179
2. டி.ஆர்.பாரிவேந்தர் - இந்திய ஜனநாயக கட்சி-683697-வெற்றி
3. எம்.ராஜசேகரன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-45591
4. கே.சாந்தி - நாம் தமிழர் கட்சி-53545
5. ஆர்.முத்துலட்சுமி - பகுஜன் சமாஜ் கட்சி-4586
6. எம்.ராஜசேகரன் - எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம்-960
7. எஸ்.வினோத்குமார் - தமிழ்நாடு இளைஞர் கட்சி-1617
8. ஏ.செந்தில்வேல் - உழைப்பாளி மக்கள் கட்சி-1147
9. டி.ஜாவீத் உசேன் - சுயேச்சை-913
10. வி.அண்ணாதுரை - சுயேச்சை-962
11. பி.ஆனந்தராஜ் - சுயேச்சை-878
12. எஸ்.சபாபதி - சுயேச்சை-885
13. டி.ராஜசேகரன் - சுயேச்சை-2455
14. கே.சுரேஷ்- சுயேச்சை-1385
15. எம்.கருப்பையா - சுயேச்சை-839
16. பி.முருகன் - சுயேச்சை-4313
17. பி.பச்சமுத்து - சுயேச்சை-3336
18. ஜெ.வின்சென்ட் மெல்போன் - சுயேச்சை-3171
19. என்.உத்தமசெல்வன் - சுயேச்சை-983
20. நோட்டா-11325
------------------------------------
விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது பெரம்பலூர் தொகுதி. சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி போன்றவற்றின் உற்பத்தியில் பெரம்பலூர் மாநில அளவில் முதல் வரிசையில் இடம் பிடித்து பெருமை சேர்க்கிறது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் முன்பு பெரம்பலூர் (தனி), உப்பிலியபுரம் (தனி), வரகூர் (தனி), அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்று இருந்தன.
தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009–ம் ஆண்டு முதல் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), பெரம்பலூர் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. முன்பு தனி தொகுதியாக இருந்த, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி, மறுசீரமைப்புக்குப் பின் பொதுத் தொகுதியாக மாறி உள்ளது. 1951–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரை 16 நாடாளுமன்ற தேர்தல்களை பெரம்பலூர் தொகுதி சந்தித்துள்ளது.
முதல் வெற்றி
-------------
பெரம்பலூர் தொகுதியில் 1951–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை சேர்ந்த பூவராகசாமி படையாச்சி முதல் வெற்றியை பதிவு செய்தார். 1957–ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பழனியாண்டி வெற்றி பெற்றார். 1962–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் செழியன் வெற்றி பெற்றார். 1967, 1971–ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் துரைராசு வெற்றி வாகை சூடினார். 1977–ம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த அ.தி.மு.க., பெரம்பலூர் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளரான அசோக்ராஜ் வெற்றி பெற்றார். 1980–ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மணி வெற்றி பெற்றார். 1984–ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தங்கராசு வெற்றி பெற்றார்.
1989, 1991–ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்ராஜே வெற்றி பெற்றார். 1996–ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்
ஆ.ராசா வெற்றி பெற்றார். 1998–ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜரத்தினம் வெற்றி பெற்றார். 1999, 2004–ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவே வெற்றி பெற்றார். 2009–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நடிகர் நெப்போலியன், அ.தி.மு.க. வேட்பாளர் கே.கே. பாலசுப்பிரமணியனை 77,604 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பி.மருதராஜா வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சீமானூர் பிரபுவை 2,13,048 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தீர்க்கப்படாத பிரச்சினை
-------------------------
விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழிலை கொண்டுள்ள பெரம்பலூர் தொகுதியில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. இதில் சின்னவெங்காயம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பெரம்பலூரில், அதனை பதப்படுத்தி வைக்க குளிர்பதன கிடங்கு கட்டியும் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. காய்கறி–பழங்களுக்கான குளிர்பதன கிடங்கு அமைக்கப்படவில்லை.
ஒவ்வொரு முறையும் எம்.பி. தேர்தலில் போட்டியிடுபவர்கள், நான் வெற்றி பெற்றால், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னவெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் ஆகியவற்றில் இருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்று கூறுகின்றனர். ஆனால் இதுவரைக்கும் யாராலும் தொடங்கப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, பொறியியல், வேளாண்மை கல்லூரிகள் அமைக்கப்படவில்லை. பெரம்பலூர் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படவில்லை. அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை விவசாயிகளுக்கு இதுவரை திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை தீர்க்க கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவுப்படுத்தப்படவில்லை. புதிய திட்டங் களும் தொடங்கப்படவில்லை.
ரெயில் சேவை
இதேபோல் குளித்தலையில் வாழை ஆராய்ச்சி மையம் தொடங்கப்படவில்லை. லால்குடியில் உள்ள அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படவில்லை. லால்குடி ரெயில் நிலையத்தில் குருவாயூர், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அந்த பகுதி மக்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. துறையூர் பகுதியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு கூட எம்.பி. எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்று கூறப்படுகிறது. முசிறி பகுதியில் வேலைவாய்ப்பினை உருவாக்க தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியையும் எம்.பி. இன்னும் நிறைவேற்றவில்லை. பெரம்பலூர் தொகுதியை எடுத்து கொண்டால் குறைகளுக்கு பஞ்சம் இல்லை. தமிழகத்தில் ரெயில் சேவை இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் உள்ளது. தற்போது தான் அரியலூரில் இருந்து துறையூர் வழியாக நாமக்கல் வரை ரெயில் வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய ரூ.16.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு பெரம்பலூரில் ரூ.24 கோடிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. திருச்சி– சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் விபத்துகளை தடுக்க ரூ.15 கோடி அளவில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் தொகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பதற்கு தான் எம்.பி. நிதி அதிகம் செலவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
--------------------------------------
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில்
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.பி.மருதராஜா வெற்றி
பெற்றார். இதில் முதல் 6 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:–
ஆர்.பி.மருதராஜா (அ.தி.மு.க.) 4,62,693
சீமானூர் பிரபு (தி.மு.க.) 2,49,645
டி.ஆர். பச்சமுத்து என்கிற பாரிவேந்தர்
(ஐ.ஜே.கே.–பா.ஜ.க.கூட்டணி) 2,38,887
ராஜசேகரன் (காங்கிரஸ்) 31,998
நோட்டா 11,605
ராமர் யாதவ் (தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ்) 6,324
வெற்றி யார் கையில்?
------------------------
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது, இங்கு தி.மு.க. 7 முறையும், அ.தி.மு.க. 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தி.மு.க.வின் கோட்டையாக இருந்த பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க. வெற்றிக்கனியை பெற்றது. 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குளித்தலை, லால்குடி, துறையூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை தி.மு.க.வும், மண்ணச்சநல்லூர், முசிறி, பெரம்பலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை அ.தி.மு.க.வும் கைப்பற்றின. தற்போது பெரம்பலூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், அ.ம.மு.க. சார்பில் ராஜசேகரன், நாம் தமிழர் சார்பில் க.சாந்தி உள்பட 19 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில்குமார் வேட்பு மனு தாக்கலுக்கு தாமதமாக வந்ததாலும், உரிய ஆவணங்கள் இல்லாததாலும் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப் பட்டது.
2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, பெரம்பலூர் தொகுதியில் மொத்தம் 12,84,269 வாக்காளர்கள் இருந்தனர். அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 92,230 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே, புதிய வாக்காளர்களின் ஓட்டும் வெற்றியை நிர்ணயிப்பதில் துருப்பு சீட்டாக இருக்கும்.
வாக்காளர்கள் எவ்வளவு?
--------------------------
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல் படி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 13,76,499 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 6,72,146. பெண் வாக்காளர்கள் 7,04,273. மூன்றாம் பாலினத்தவர் 80. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:–
குளித்தலை 2,13,806
லால்குடி 2,08,578
மண்ணச்சநல்லூர் 2,29,588
முசிறி 2,21,936
துறையூர் (தனி) 2,16,194
பெரம்பலூர் (தனி) 2,86,397
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
-------------------------------------
2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருந்த 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:
குளித்தலை (தி.மு.க. வெற்றி)
எ.ராமர் (தி.மு.க.) 89,923
ஆர்.சந்திரசேகரன் (அ.தி.மு.க.) 78,027
டி.ஜமுனா (தே.மு.தி.க.) 6,726
சீனி. பிரகாசு (நாம் தமிழர்) 1,643
லால்குடி (தி.மு.க. வெற்றி)
எ.சவுந்தரபாண்டியன் (தி.மு.க.) 77,946
விஜயமூர்த்தி (அ.தி.மு.க.) 74,109
ஜெயசீலன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) 6,784
சம்பத் (நாம் தமிழர்) 1,521
மண்ணச்சநல்லூர் (அ.தி.மு.க. வெற்றி)
பரமேஸ்வரி முருகன் (அ.தி.மு.க.) 83,083
எஸ்.கணேசன் (தி.மு.க.) 75,561
பாபு (தே.மு.தி.க.) 8,193
சேது அரவிந்த் (பா.ஜ.க.) 3,662
முசிறி (அ.தி.மு.க. வெற்றி)
மா.செல்வராசு (அ.தி.மு.க.) 89,398
எஸ்.விஜயா பாபு (காங்கிரஸ்) 57,311
ராஜசேகரன் (த.மா.கா.) 8,581
ஆசைதம்பி (நாம் தமிழர்) 2,446
துறையூர் (தனி) (தி.மு.க. வெற்றி)
செ.ஸ்டாலின் குமார் (தி.மு.க.) 81,444
ஏ.மைவிழி (அ.தி.மு.க.) 73,376
சுஜாதேவி (விடுதலை சிறுத்தைகள்) 6,281
சத்யா (நாம் தமிழர்) 1,532
பெரம்பலூர் (தனி) (அ.தி.மு.க. வெற்றி)
இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.) 1,01,073
சிவகாமி (தி.மு.க.) 94,220
கே.ராஜேந்திரன் (தே.மு.தி.க.) 11,482
மு.சத்தியசீலன் (பா.ம.க.) 4,222