வாக்காளர்கள் | : | | 1484348 |
ஆண் | : | | 734764 |
பெண் | : | | 749534 |
திருநங்கை | : | | 50 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. ஆசைமணி - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்-337978
2. எஸ்.ராமலிங்கம் - திராவிட முன்னேற்ற கழகம்-599292 -வெற்றி
3. என்.கல்யாணசுந்தரம் - பகுஜன் சமாஜ் கட்சி-3183
4. கே.சுபாஷினி - நாம் தமிழர் கட்சி-41056
5. ரிபாயுதீன் - மக்கள் நீதி மய்யம்-17005
6. யு.ஹபீப் முகமது - அனைத்து ஓய்வூதியர்கள் கட்சி-17005
7. எஸ்.செந்தமிழன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-69030
8. கே.அண்ணாதுரை - சுயேச்சை-325
9. அப்துல் பாசித் - சுயேச்சை-371
10. அறவாழி - சுயேச்சை-611
11. எம்.கண்ணபிரான் - சுயேச்சை-465
12. ஆர்.கண்ணன் - சுயேச்சை-433
13.எஸ்.கிருதிவாசன் - சுயேச்சை-906
14. சண்முகம் - சுயேச்சை-728
15. சாமிதுரை - சுயேச்சை-603
16. வி.சீனிவாசன் - சுயேச்சை-2158
17. கே.சுகுமாரன் - சுயேச்சை-2473
18. பி.சுப்ரமணியன் - சுயேச்சை-3192
19. டி.திருஞானசம்பந்தம் - சுயேச்சை-1101
20. ஆர்.திருநாவுக்கரசு - சுயேச்சை-478
21. கப்பூர் தட்சிணாமூர்த்தி - சுயேச்சை-1029
22. பி.தேவதாஸ் - சுயேச்சை-1303
23. ராஜசேகர் - சுயேச்சை-1337
24. என்.ராஜா - சுயேச்சை-263
25. ராஜேஷ் - சுயேச்சை-415
26. எம்.வாணிதாஸ் - சுயேச்சை-777
27. விளவநாதன் - சுயேச்சை-1608
28. நோட்டா-8231
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள் அதிகம் உள்ளனர். இங்கு வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கிறார்கள். முஸ்லிம்களும் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை, சீர்காழி(தனி), பூம்புகார், குத்தாலம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்குப்பின் குத்தாலம் தொகுதி பிரிக்கப்பட்டு அருகில் உள்ள தொகுதிகளுடன் இணைக்கப்பட்டு விட்டன. மேலும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் இருந்த பாபநாசம், மயிலாடுதுறை தொகுதியில் இணைக்கப்பட்டது.
1962-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 14 பொதுத்தேர்தல்களை மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி சந்தித்துள்ளது.
இதில் காங்கிரஸ் 8 முறையும், அ.தி.மு.க., தி.மு.க., த.மா.கா. தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 1962-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மரகதம் சந்திரசேகர் வெற்றி பெற்றார். 1967 மற்றும் 1971-ல் நடந்த தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர் சுப்ரவேலு வெற்றி பெற்றார்.
1977, 1980-ல் நடந்த தேர்தல்களில் குடந்தை ராமலிங்கம், 1984, 1989-ல் நடந்த தேர்தல்களில் பக்கீர் முகமது, 1991-ல் நடந்த தேர்தலில் மணிசங்கர் அய்யர் ஆகிய காங்கிரஸ் கட்சியினரே வெற்றி பெற்றனர். 1996-ல் நடந்த தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிட்ட பி.வி.ராஜேந்திரன், 1998 தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். 1999, 2004-ல் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மணிசங்கர் அய்யர் வெற்றி பெற்றார்.
2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் ஓ.எஸ்.மணியன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட பாரதிமோகன் 2 லட்சத்து 70 ஆயிரத்து 50 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியை தோற்கடித்தார்.
பாரதிமோகன் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி அவர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார். இருப்பினும் மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மயிலாடுதுறையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை வெறும் அறிவிப்பாகவே உள்ளது.
சீர்காழி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும். சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய 2 இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி வழியாக காரைக்காலுக்கு மீண்டும் ரெயில் இயக்க
வேண்டும்.
தஞ்சை-மயிலாடுதுறை இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்க வேண்டும். தஞ்சை-விக்கிரவாண்டி
4 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதியில் பட்டு
நெசவு தொழிலாளர்கள், எந்திரமயத்தால் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற
வேண்டும்.
பித்தளை, சில்வர் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளங்களை தூர்வாரி, நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கும்பகோணத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய பஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும்.
திருவிடைமருதூர் பகுதியில் உள்ள ஆடுதுறையில் நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. எனவே இந்த பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அரசியல் கட்சியினரும் வேளாண்மை கல்லூரி தொடங்கப்படும் என ஒவ்வொரு முறையும் அறிவிக்கின்றனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருவிடைமருதூர் தாலுகா புறக்கணிக்கப்பட்டதைபோல உள்ளது. இங்கு அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு கலைக்கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று மக்கள் நீண்டநாட்களாக வலியுறுத்தி வந்தும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பன போன்ற பொதுமக்களின் கோரிக்கை இன்னும் தீர்க்கப்படாமல்
உள்ளது.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் 2 நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ள அ.தி.மு.க. இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்த முயற்சி மேற்கொள்ளும். 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தொகுதி தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், பாபநாசம் ஆகிய 4 தொகுதிகளை அ.தி.மு.க.வும், கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதிகளை தி.மு.க.வும் கைப்பற்றியது.
தி.மு.க.வை விட அ.தி.மு.க. கூடுதலாக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற கடுமையான போராட்டம் இருக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
2014-ம் ஆண்டு மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் 13 லட்சத்து 49 ஆயிரத்து 796 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 1 லட்சத்து 17 ஆயிரத்து 14 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். முதல்முறை வாக்களிக்க போகும் இளம் வாக்காளர்களின் வாக்கு தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதாக அமையும்.
அ.தி.மு.க. எம்.பி. பாரதிமோகனின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் கூறுகையில், Òதொகுதியில் எப்போதாவது தான் எம்.பி.யை பார்க்க முடிகிறது. குறிப்பாக பாபநாசம் தொகுதி அமைச்சர் துரைக்கண்ணு தொகுதி என்பதால் அங்கு நடைபெறும் விழாக்களில் மட்டும் கலந்து கொள்கிறார். தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மக்களுடைய பிரச்சினைகள் பெரிய அளவில் ஒன்றும் தீர்க்கப்படவில்லைÓ என்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாரதிமோகன்
வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-
பாரதிமோகன் (அ.தி.மு.க.) 5,13,729
ஹைதர்அலி (மனிதநேய மக்கள் கட்சி) 2,36,679
அகோரம் (பா.ம.க.) 1,44,085
மணிசங்கர்அய்யர் (காங்.) 58,465
பாண்டியன் (சுயே.) 11,613
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் 14 லட்சத்து 66 ஆயிரத்து 810 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,27,720. பெண் வாக்காளர்கள் 7,39,040. இதர பாலினத்தவர் 50. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
சீர்காழி 2,36,672
மயிலாடுதுறை 2,32,659
பூம்புகார் 2,57,697
திருவிடைமருதூர் 2,40,794
கும்பகோணம் 2,54,934
பாபநாசம் 2,44,054
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டுகள் விவரம் வருமாறு:-
மயிலாடுதுறை (அ.தி.மு.க. வெற்றி)
ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.) 70,949
குத்தாலம் அன்பழகன் (தி.மு.க.) 66,171
அய்யப்பன் (பா.ம.க.) 13,115
அருள்செல்வன் (தே.மு.தி.க.) 12,294
பூம்புகார் (அ.தி.மு.க. வெற்றி)
பவுன்ராஜ் (அ.தி.மு.க.) 87,666
ஷாஜகான் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) 67,731.
அன்பழகன் (பா.ம.க.) 16,241
சங்கர் (த.மா.கா.) 14,806
சீர்காழி (தனி) (அ.தி.மு.க. வெற்றி)
பாரதி (அ.தி.மு.க.) 76,487
கிள்ளைரவீந்திரன் (தி.மு.க.) 67,484
பொன்.முத்துக்குமார் (பா.ம.க.) 14,890
உமாநாத் (தே.மு.தி.க.) 12,060
பாபநாசம் (அ.தி.மு.க. வெற்றி)
துரைக்கண்ணு (அ.தி.மு.க.) 82,614
லோகநாதன் (காங்கிரஸ்) 58,249
ஆலயமணி (பா.ம.க.) 4,963
குணசேகரன் (பா.ஜ.க.) 2,158.
கும்பகோணம் (தி.மு.க. வெற்றி)
அன்பழகன் (தி.மு.க.) 85,048
ரத்னாசேகர் (அ.தி.மு.க.) 76,591
பரமசிவம் (தே.மு.தி.க.) 8,098
வெங்கட்ராமன் (பா.ம.க.) 8,048
திருவிடைமருதூர் (தி.மு.க. வெற்றி)
கோவி.செழியன் (தி.மு.க.) 77,538
சேட்டு (அ.தி.மு.க.) 77,006
மாதையன் (பா.ம.க.) 13,709
விவேகானந்தன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) 10,622