வாக்காளர்கள் | : | | 1363650 |
ஆண் | : | | 673660 |
பெண் | : | | 689899 |
திருநங்கை | : | | 91 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் - திராவிட முன்னேற்ற கழகம் - 522160-வெற்றி
2. சி.ஜெயபிரகாஷ் - பகுஜன் சமாஜ் கட்சி - 2754
3. அண்ணாமலை - மக்கள் நீதி மய்யம் - 23713
4. குப்புசாமி - ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி - 7338
5. ஆர்.கோவிந்தசாமி - பாட்டாளி மக்கள் கட்சி - 378177
6. ஆர்.சித்ரா - நாம் தமிழர் கட்சி - 34692
7. செல்லத்துரை - தமிழக இளைஞர் கட்சி - 2528
8. எம். பாவாடை ராஜா - அகில இந்திய மக்கள் கழகம் - 451
9. கே.தங்கவேல் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 44892
10. எம்.ரகுநாதன் - இளந்தமிழர் முன்னணி கழகம் - 727
11. ஏ.மணிகண்டன் - சுயேச்சை - 621
12. எஸ்.ராஜமோகன் - சுயேச்சை - 901
13. கே.ராமன் - சுயேச்சை - 1884
14. டி.சங்கர் - சுயேச்சை - 2796
15. எம்.சத்தியசேலன் - சுயேச்சை - 1640
16. டி.செந்தாமரை கண்ணண் - சுயேச்சை - 1230
17. எஸ்.தனசேகரன் - சுயேச்சை - 3222
18. ஏ.மாரிமுத்து - சுயேச்சை - 613
19. மூவேந்தன் - சுயேச்சை - 1479
20. ஏ.ஜெயமணி - சுயேச்சை - 565
21. கே.ஹேமந்த் குமார் - சுயேச்சை - 1314
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்துக்கு புகழ் பெற்ற பண்ருட்டி, நவரத்னா அந்தஸ்து பெற்ற நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டது கடலூர் நாடாளுமன்ற தொகுதி.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு இந்த தொகுதியில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருந்தன. 2008–ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது நெல்லிக்குப்பம் சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டது. அதேபோல் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய தொகுதிகள் இங்கிருந்து பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டன. அதே நேரம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்த குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டன.
தற்போது கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி(தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
கடந்த 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. உள்பட 17 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன் 4 லட்சத்து 81 ஆயிரத்து 429 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக வந்த தி.மு.க. வேட்பாளர் நந்தகோபாலகிருஷ்ணன் 2 லட்சத்து 78 ஆயிரத்து 304 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட ஜெயசங்கர் 1 லட்சத்து 47 ஆயிரத்து 606 வாக்குகள் பெற்று 3–ம் இடத்தையும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.அழகிரி 26 ஆயிரத்து 650 வாக்குகளை பெற்று 4–ம் இடத்தையும், இ.கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிட்ட கு.பாலசுப்பிரமணியன் 11 ஆயிரத்து 122 வாக்குகளை பெற்று 5–ம் இடத்தையும் பிடித்தனர்.
தீர்க்கப்படாத பிரச்சினைகள்
கடலூர் நாடாளுமன்ற தொகுதி பின்தங்கிய தொகுதியாகவே இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உருவான நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தையும், அனல் மின்நிலையத்தையும் தவிர வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய பெரிய தொழிற்சாலைகள் எதுவும் பிற்காலத்தில் தொடங்கப்படவில்லை.
முந்திரி தொழிலுக்கு சிறப்பு பெற்ற பண்ருட்டியை தலைமையிடமாக கொண்டு முந்திரி ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கிடப்பிலேயே உள்ளது. கடலூரில் இருந்து புதுச்சேரி, மகாபலிபுரம் வழியாக சென்னைக்கு கிழக்கு கடற்கரையோரமாக புதிய ரெயில்பாதை அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு பொதுமக்களின் நீண்டநாள் கனவாகவே இருந்து வருகிறது. விழுப்புரத்தில் இருந்து மருதாடு வழியாக கடலூருக்கு தொழில்மேம்பாட்டு சாலை அமைக்கும் திட்டம் அறிவிப்போடு உள்ளது. கடலூரில் இருந்து சென்னைக்கு நீர் வழி பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டம் கிடப்பிலேயே உள்ளது. நெய்வேலியில் சிறு விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடக்க நிலையிலேயே இருக்கிறது. விவசாயத்துக்கு பெயர்போன இந்த தொகுதியில் வேளாண்மை பல்கலைக்கழகம் கொண்டு வர வேண்டும் என்பது இந்த மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படி கடலூர் தொகுதியில் உள்ள குறைகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம். கடலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. அருண்மொழிதேவனிடம் கடந்த 5 ஆண்டு காலத்தில் தொகுதியில் மேற்கொண்ட பணிகள் குறித்து கேட்டபோது, மத்திய அரசின் பொது நிதியில் இருந்து புதுச்சேரி–கடலூர்–சிதம்பரம், கடலூர்–விருத்தாசலம்–சேலம், திட்டக்குடி–பெண்ணாடம்–கருவேப்பிலங்குறிச்சி ஆகிய சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றி சாலையை அகலப்படுத்தி அமைத்துள்ளேன். கிடப்பில் கிடந்த விக்கிரவாண்டி–கும்பகோணம் 4 வழிச்சாலை பணியை தொடங்க நடவடிக்கை எடுத்தேன். கடலூர் தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம், ரூ.135 கோடியில் கடலூர் துறைமுக விரிவாக்க திட்டம், சுமார் ரூ.6 கோடியில் வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளேன். அந்த்யோதயா எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் கடலூரிலும், செந்தூர் எக்ஸ்பிரஸ் பண்ருட்டியிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுத்துள்ளேன். கடலூர் முதுநகர் வரை இயக்கப்பட்டு வந்த திருச்சி–கடலூர் முதுநகர் பயணிகள் ரெயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இவ்வாறு அருண்மொழிதேவன் எம்.பி. கூறினார்.
2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில்
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அ.அருண்மொழிதேவன் வெற்றிபெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:–
அருண்மொழிதேவன்(அ.தி.மு.க.) 4,81,429
நந்தகோபாலகிருஷ்ணன்(தி.மு.க.) 2,78,304
ஜெயசங்கர்(தே.மு.தி.க.) 1,47,606
கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்) .26,650
கு.பாலசுப்பிரமணியன்(இ.கம்யூனிஸ்டு) 11,122
வாக்காளர்கள் எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 13 லட்சத்து 42 ஆயிரத்து 320 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 64 ஆயிரத்து 313 பேரும், பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 77 ஆயிரத்து 928 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 79 பேரும் உள்ளனர்.
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:–
திட்டக்குடி(தனி) 2,11,256
விருத்தாசலம் 2,38,430
நெய்வேலி 2,06,125
பண்ருட்டி 2,32,964
கடலூர் 2,24,782
குறிஞ்சிப்பாடி 2,28,763
வெற்றி யார் கையில்?
இதுவரை 15 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ள கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், த.மா.கா, உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் சுயேச்சை ஆகியோர் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 2016–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் இந்த தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய 3 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது. குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, திட்டக்குடி(தனி) ஆகிய 3 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது. இதில் அ.தி.மு.க. சார்பில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தற்போது டி.டி.வி. தினகரன் கட்சியான அ.ம.மு.க.வில் உள்ளார். கடலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்த வரையில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். மேலும் மீனவர்கள், முஸ்லிம்கள், ரெட்டியார், செட்டியார், முதலியார், நாயுடு, நாடார் உள்ளிட்ட பிற சமுதாயத்தினரும் உள்ளனர். இந்த தொகுதியை பொறுத்தவரையில் அரசியல் கூட்டணிகளின் பலம் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது என்பதே கடந்த கால வரலாறு. தற்போது நடைபெறும் தேர்தலில் கடலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக டாக்டர் கோவிந்தசாமி, தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.வி. எஸ்.ஸ்ரீரமேஷ், மக்கள் நீதி மய்யம் சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் சித்ரா ஆகியோர் களத்தில் உள்ளனர். அ.ம.மு.க சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கே.ஆர்.கார்த்திக்கின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதே சமயம் அவருக்கு மாற்று வேட்பாளரான தங்கவேல் மனு ஏற்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் போட்டி பலமாக இருப்பதாகவே அரசியல் பிரமுகர்கள் கருதுகிறார்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இந்த தொகுதியில் 9 லட்சத்து 86 ஆயிரத்து 30 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 290 வாக்காளர்கள் அதிகரித்து தற்போது கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 13 லட்சத்து 42 ஆயிரத்து 320 வாக்காளர்கள் உள்ளனர். எனவே புதிய வாக்காளர்கள்தான் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றியை தீர்மானிக்க கூடிய சக்திகளாக இருக்கிறார்கள் என்றே கூறலாம்.
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2016 சட்டசபை தேர்தலின் போது கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:
திட்டக்குடி (தனி) (தி.மு.க. வெற்றி)
கணேசன்(தி.மு.க.) 65,139
அய்யாசாமி(அ.தி.மு.க) 62,927
சபா.சசிகுமார் (தே.மு.தி.க.) 14,657
அர்ச்சுனன்(பா.ம.க.) 11,438
வேதமாணிக்கம்(சுயே) 1,015
விருத்தாசலம் (அ.தி.மு.க. வெற்றி)
வி.டி.கலைச்செல்வன்(அ.தி.மு.க.) 72,611
கோவிந்தசாமி(தி.மு.க.) 58,834
தமிழரசி(பா.ம.க.) 29,340
முத்துகுமார்(தே.மு.தி.க.) 18,563
சிவராஜ்(நாம்தமிழர் கட்சி) 844
நெய்வேலி (தி.மு.க. வெற்றி)
சபா.ராஜேந்திரன்(தி.மு.க.) 54,299
ராஜசேகர்(அ.தி.மு.க.) 36,508
வேல்முருகன் (த.வா.க.) 30,528
ஜெகன்(பா.ம.க.) 19,749
ஆறுமுகம்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) 12,674
பண்ருட்டி (அ.தி.மு.க. வெற்றி)
சத்யாபன்னீர்செல்வம்(அ.தி.மு.க.) 72,353
பொன்குமார்(தி.மு.க.) 69,225
தர்மலிங்கம்(பா.ம.க.) 18,666
சிவகொழுந்து(தே.மு.தி.க.) 18,409
சரவணன்(பா.ஜ.க.) 1,373
கடலூர் (அ.தி.மு.க. வெற்றி)
எம்.சி.சம்பத் (அ.தி.மு.க.) 70,922
இள.புகழேந்தி (தி.மு.க) 46,509
சந்திரசேகர்(த.மா.கா.) 20,608
தாமரைக்கண்ணன்(பா.ம.க.) 16,905
சீமான்(நாம்தமிழர் கட்சி) 12,497
குறிஞ்சிப்பாடி (தி.மு.க. வெற்றி)
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.க.) 82,864
சொரத்தூர் ராஜேந்திரன் (அ.தி.மு.க.) 54,756
முத்துகிருஷ்ணன்(பா.ம.க.) 22,705
பாலமுருகன்(தே.மு.தி.க.) 21,063
ஜலதீபன்(நாம் தமிழர் கட்சி) 1,534