வாக்காளர்கள் | : | | 1479108 |
ஆண் | : | | 736655 |
பெண் | : | | 742394 |
திருநங்கை | : | | 59 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. பி.சந்திரசேகர் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 497010
2. தொல்.திருமாவளவன் - விடுதலை சிறுத்தைகள் கட்சி - 500229 (வெற்றி)
3. ஏ.இளவரசன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 62308
4. எம்.சிவஜோதி - நாம் தமிழர் கட்சி - 37471
5. டி.ரவி - மக்கள் நீதி மய்யம் - 15334
6. எஸ்.பார்வதி - தேசிய மக்கள் சக்தி கட்சி - 15334
7. எம்.கிருஷ்ணராஜ் - அனைத்து மக்கள் புரட்சி கட்சி - 4675
8. ஆர்.கலையரசன் - சுயேச்சை - 2155
9. டி.கிட்டு - சுயேச்சை - 1200
10. ஏ.கிருஷ்ணகுமாரி - சுயேச்சை - 1706
11. பி.குருசாமி - சுயேச்சை - 7012
12. டி.பெரியசாமி - சுயேச்சை - 1464
13. எம்.ஜெகதீசன் - சுயேச்சை - 2993
14. எவரும் இல்லை - 15535
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தனி தொகுதியாகும். இந்த தொகுதி கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பரந்து விரிந்து காணப்படுகிறது. புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்கோவில், அண்ணாமலை பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம், வீராணம் ஏரி ஆகியவை இந்த தொகுதியின் சிறப்பம்சங்களாகும்.
1957–ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது இத்தொகுதி இரட்டை உறுப்பினர்களை கொண்ட தொகுதியாக இருந்தது. 2004–ம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை இத்தொகுதியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில்(தனி), மங்களூர்(தனி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.
தொடர் வெற்றி
2008–ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது திட்டக்குடி (முன்பு மங்களூர் தொகுதி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகள் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு கடலூர் நாடாளுமன்ற தொகுதியுடன் சேர்க்கப்பட்டது. அதற்கு பதிலாக அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த குன்னம் தொகுதியும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.
தற்போது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில்(தனி), அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த குன்னம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.
இது வரை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் இத்தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 4 முறையும், பா.ம.க. 3 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு முறையும் வென்றுள்ளன.
1957–ம் ஆண்டு இரட்டை தொகுதியாக இருந்த இந்த தொகுதியில் கனகசபை, இளையபெருமாள், 1962–ல் கனகசபை ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 1967, 1971–ம் ஆண்டுகளில் மாயவன் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1977–ம் ஆண்டு முருகேசன் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980–ம் ஆண்டு குழந்தைவேலு தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1984, 1989, 1991–ம் ஆண்டுகளில் வள்ளல்பெருமான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தொடர் வெற்றி பெற்றார். 1996–ம் ஆண்டு கணேசன் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1998–ம் ஆண்டு ஏழுமலையும், 1999, 2004–ம் ஆண்டுகளில் பொன்னுசாமியும் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 2009–ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சந்திரகாசி 4 லட்சத்து 29 ஆயிரத்து 536 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 3 லட்சத்து ஆயிரத்து 41 ஓட்டுகள் பெற்றார். பா.ம.க. சார்பில் போட்டியிட்ட சுதா மணிரத்தினம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 16 ஓட்டுகள் பெற்றார்.
தொடரும் பிரச்சினைகள்
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விவசாயமே பிரதானமாக உள்ளது. பின் தங்கிய கடைமடை பகுதியான இந்த தொகுதியில் முழுமையான வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. கொள்ளிடம், வெள்ளாறு ஆகிய ஆறுகளின் படுகை மட்டம் குறைந்து போனதால் உப்பு நீர் ஊடுருவல் 40 கிலோ மீட்டருக்கு மேல் பரவி நிலத்தடி நீரை பாதித்து வருகிறது. கரை மட்ட தடுப்பணை அமைத்து கடல் நீர் உட்புகுவதை தடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
குன்னம், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய அரியலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை மறு சீரமைத்து மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. வீராணம் ஏரியில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க திட்டங்கள் எதுவும் இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இந்த தொகுதியில் தொழில் வளர்ச்சி இல்லை. ஜெயங்கொண்டத்தில் என்.எல்.சி. அனல் மின்நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் முந்திரி சாகுபடி பொய்த்து போனதால் முந்திரி பருப்பு தரம் பிரிப்பு ஆலைகள் மற்றும் முந்திரி தோலில் இருந்து வார்னிஷ் தயாரிக்கும் நிறுவனங்கள் நலிவடையும் நிலையில் உள்ளன. இதை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
எம்.பி. என்ன
சொல்கிறார்?
சிதம்பரம் தொகுதி எம்.பி.யான சந்திரகாசி கூறுகையில், அரியலூரில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரியலூர், சிதம்பரம் ரெயில் நிலையங்களில் பல்வேறு அடிப்படை பணிகள், அந்த்யோதயா உள்பட 3 ரெயில்கள் சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை, சிதம்பரம்– திருச்சி தேசிய நெடுஞ்சாலைப்பணிகள், மத்திய அரசு நிதியில் இருந்து பல்வேறு இடங்களில் இணைப்பு சாலைகள் அமைத்தல், சிதம்பரம் தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை, 3 இடங்களில் புதிய தபால் நிலையங்கள் திறப்பு உள்பட பல்வேறு பணிகள் செய்துள்ளேன் என்றார்.
இந்த தொகுதியில் அதிக அளவில் ஆதிதிராவிடர்களும், அடுத்தபடியாக வன்னியர்களும் உள்ளனர். இது தவிர உடையார்கள், பிள்ளைமார்கள், யாதவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தினரும் கணிசமாக உள்ளனர். நெல், பருத்தி, கரும்பு, மக்காச்சோளம் ஆகியவை இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. அரியலூரில் 6 சிமெண்டு ஆலைகளும், ஒரு சர்க்கரை ஆலையும், சேத்தியாத்தோப்பில் ஒரு சர்க்கரை ஆலையும் உள்ளன.
2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சந்திரகாசி வெற்றி பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:–
சந்திரகாசி (அ.தி.மு.க.)................................. 4,29,536
திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)...3,01,041
சுதா மணிரத்தினம் (பா.ம.க.) ....................... 2,79,016
வள்ளல்பெருமான் (காங்கிரஸ்)....................... 28,988
வாக்காளர்கள் எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 14,59,735 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,28,368 பெண் வாக்காளர்கள் 7,31,315 மூன்றாம் பாலினத்தினர் 52 பேர் உள்ளனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம்:–
சிதம்பரம் ..................................... 2,35,980
புவனகிரி .................................... 2,39,952
காட்டுமன்னார்கோவில்(தனி)........ 2,17,824
குன்னம் ..................................... 2,60,294
ஜெயங்கொண்டம்........................ 2,54,224
அரியலூர் ................................... 2,51,461
வெற்றி யார் கையில்?
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 5 முறை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்தனர். இதை தி.மு.க. முறியடித்தது. இந்த தொகுதியில் தி.மு.க. 4 முறை வென்று அசத்தியது. அதன்பிறகு அ.தி.மு.க., பா.ம.க.வும் இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடி இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரு முறை வென்றுள்ளது.
இந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில்(தனி), குன்னம், ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க. வசமும், புவனகிரி தி.மு.க. வசமும் உள்ளது.
2014–ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் வேட்பாளராக களம் இறங்குகிறார். இதன் மூலம் சிதம்பரம் தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது. அதேவேளையில் அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகர் , அ.ம.மு.க. வேட்பாளராக இளவரசன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக ரவி, நாம் தமிழர் கட்சி சார்பில் சிவஜோதி ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதனால் இங்கு வெற்றிக்கு கடுமையான போட்டி இருக்கும்.
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருந்த 6 சட்டமன்ற தொகுதியில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டுகள் விவரம் வருமாறு:–
சிதம்பரம் தொகுதி (அ.தி.மு.க. வெற்றி)
கே.ஏ.பாண்டியன் (அ.தி.மு.க.) ....................... 58,543
கே.ஆர்.செந்தில்குமார் (தி.மு.க.) ........................ 57,037
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி......... 23,314
அருள் (பா.ம.க.) ....................................... 24,226
புவனகிரி (தி.மு.க. வெற்றி)
துரை.கி.சரவணன் (தி.மு.க.)............................ 60,554
செல்விராமஜெயம் (அ.தி.மு.க.) ....................... 55,066
அசோக்குமார் (பா.ம.க.) ............................. 33,681
சிந்தனைச்செல்வன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி).... 33,662
காட்டுமன்னார்கோவில் (தனி) (அ.தி.மு.க. வெற்றி)
முருகுமாறன் (அ.தி.மு.க.) .............................. 48,450
திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)... 48,363
மணிரத்தினம் (காங்கிரஸ்) ........................... 37,346
அன்புசோழன் (பா.ம.க.) .............................. 25,890
குன்னம் (அ.தி.மு.க. வெற்றி)
ஆர்.டி.ராமச்சந்திரன் (அ.தி.மு.க)..................... 78,218
தங்க துரைராஜ் (தி.மு.க)............................ 59,422
வைத்திலிங்கம் (பா.ம.க)......................... 37,271
ஆலூர் ஷா நவாஸ் (விடுதலை சிறுத்தைகள்)....19,853
அரியலூர் (அ.தி.மு.க. வெற்றி)
தாமரை எஸ்.ராஜேந்திரன் (அ.தி.மு.க.)................ 88,523
எஸ்.எஸ். சிவசங்கர் (தி.மு.க.).......................... 86,480
இராம.ஜெயவேல் (தே.மு.தி.க.)......................... 13,599
திருமாவளவன் (பா.ம.க.).................................13,529
ஜெயங்கொண்டம் (அ.தி.மு.க. வெற்றி)
ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் (அ.தி.மு.க.).......... 75,672
ஜெ.குரு (பா.ம.க.)..................................... 52,738
ஜி.ராஜேந்திரன் (காங்கிரஸ்)............................. 46,868
எம்.எஸ்.கந்தசாமி (ம.தி.மு.க.)....................... 21,405