வாக்காளர்கள் | : | | 2253041 |
ஆண் | : | | 1122731 |
பெண் | : | | 1129970 |
திருநங்கை | : | | 340 |
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019
------------------------------
1. வைத்தியலிங்கம் - பாட்டாளி மக்கள் கட்சி - 285326
2. டி.ஆர்.பாலு - திராவிட முன்னேற்ற கழகம் - 793281 (வெற்றி)
3. தாம்பரம் நாராயணன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 41497
4. மகேந்திரன் - நாம் தமிழர் கட்சி - 84979
5. ஸ்ரீதர் - மக்கள் நீதி மய்யம் - 135525
6. அந்தோணி - பகுஜன் சமாஜ் - 6808
7. காட்வின் சாத்ராஜ் - தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சி - 3599
8. பழனிவேலு (இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)(விடுதலை) - 2618
9. ராஜசேகர் - ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி - 13746
10. அனந்தராமன் - சுயேச்சை - 941
11.அயோத்தி - சுயேச்சை - 4050
12. இந்தியன் - சுயேச்சை - 1185
13. சசிக்குமார் - சுயேச்சை - 804
14. சிங்கராஜன் - சுயேச்சை - 738
15.முத்துமாறன் - சுயேச்சை - 1371
16. ராஜா மாரிமுத்து - சுயேச்சை - 2268
17. வசந்தி - சுயேச்சை - 2018
18. விருதகிரி - சுயேச்சை - 1800
19. வைத்தியலிங்கம் - சுயேச்சை - 885
20. எவரும் இல்லை - 23343
வாக்காளர்கள் எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 22,10,861 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 11,22,231. பெண் வாக்காளர்கள் 11,08,288. மூன்றாம் பாலினத்தவர்&342.
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
ஸ்ரீபெரும்புதூர் 3,19,457
ஆலந்தூர் 3,56,522
பல்லாவரம் 4,01,674
தாம்பரம் 3,75,331
மதுரவாயல் 4,04,085
அம்பத்தூர் 3,53,792
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதியாகும். ஹூண்டாய், நிசான், ராயல் என்பீல்டு, செயிண்ட்கோபைன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்த தொகுதியில் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ள தொழில் நகரமாக இந்த தொகுதி விளங்குகிறது.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்று இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009-ம் ஆண்டு முதல் ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 6 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் 1967&ம் ஆண்டு சிவசங்கரன் (தி.மு.க.), 1971-ம் ஆண்டு டி.எஸ்.லட்சுமணன் (தி.மு.க.) வெற்றி பெற்றனர். 1977-ம் ஆண்டு சீராளன் ஜெகநாதன் (அ.தி.மு.க.) வெற்றிபெற்றார். 1980-ம் ஆண்டு நாகரத்தினம் (தி.மு.க.) வெற்றி பெற்றார். 1984, 1989, 1991-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் வெற்றி பெற்றார்.
1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாகரத்தினம் (தி.மு.க.) வெற்றி பெற்றார்.
1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் வேணுகோபால் வெற்றி பெற்றார். 1999, 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஆ.கிருஷ்ணசாமி தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார்.
2009-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.என்.ராமசந்திரன் வெற்றி பெற்று 5 லட்சத்து 45 ஆயிரத்து 820 வாக்குகள் பெற்று தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகனை தோற்கடித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியை சுற்றிலும் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவர்கள் அதிகம் பணிபுரிவதால் உள்ளூர் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது.
நாளுக்கு நாள் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகரித்து வருவதால் தொகுதியில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே செங்கல்பட்டு செல்லும் கூட்டுச்சாலையில் மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாகும்.
சுங்குவார்சத்திரம் பகுதி சுற்றி தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. சுங்குவார்சத்திரம் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரசாரத்துக்கு வரும் கட்சி வேட்பாளர்கள் இங்கு பஸ் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிப்பார்கள் என்றும் ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தொகுதி பக்கம் எட்டிகூட பார்க்கமாட்டார்கள் என்பதும் பொதுமக்களின் குறையாக உள்ளது.
தொழில் நகரம் என அழைக்கப்படும் ஸ்ரீபெரும்புதூரில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு, அப்போது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த (தி.மு.க.) கிருஷ்ணசாமி ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர்-சென்னை இடையே ரெயில் பாதை அமைத்து ரெயில் சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆனால் இன்னும் பாதை அமைக்கப்படவில்லை.சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ளது. மழை பெய்து ஏரி நிரம்பி உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது.
வெளியேற்றப்படும் உபரி நீர் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை கடந்து வெள்ளப்பெருக்காக ஓடுவதால் இந்த சாலை துண்டிக்கப்படுகிறது.
ஆகையால் இந்த சாலையில் போக்குவரத்து தடைபடாமல் இருக்க ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:&
ஸ்ரீபெரும்புதூர் (அ.தி.மு.க. வெற்றி)
பழனி (அ.தி.மு.க.) 1,01,001
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) 92,285
முத்துக்குமார் (பா.ம.க.) 18,185
வீரக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) 13,629
மனோகரன் (பா.ஜ.க.) 3,939
ஆலந்தூர் (தி.மு.க. வெற்றி)
தா.மோ.அன்பரசன் (தி.மு.க.) 96,877
பண்ருட்டி ராமச்சந்திரன் (அ.தி.மு.க.) 77,708
சத்தியநாராயணன் (பா.ஜ.க.) 12,806
சந்திரன் (தே.மு.தி.க.) 12,291
சீனிவாசன் (பா.ம.க) 7,194
பல்லாவரம் (தி.மு.க. வெற்றி)
கருணாநிதி (தி.மு.க.) 1,12,891
சி.ஆர்.சரஸ்வதி (அ.தி.மு.க.) 90,726
வீரலட்சுமி (ம.தி.மு.க.) 14,083
கோபிஅய்யாசாமி (பா.ஜ.க.) 11,781
ஆர்.வெங்கடேசன் (பா.ம.க.) 9,339
தாம்பரம் (தி.மு.க. வெற்றி)
எஸ்.ஆர்.ராஜா (தி.மு.க.) 1,01,835
சிட்லபாக்கம் ராஜேந்திரன்(அ.தி.மு.க.) 87,390
மா.செழியன் (தே.மு.தி.க.) 14,559
வேதசுப்பிரமணியன் (பா.ஜ.க.) 10,327
சுரேஷ் (பா.ம.க.) 7,631
மதுரவாயல் (அ.தி.மு.க. வெற்றி)
பென்ஜமின் (அ.தி.மு.க.) 99,739
நாசே ஆர்.ராஜேஷ் (காங்) 91,337
பீமாராவ் ( இந்திய கம்யூனிஸ்டு கட்சி) 19,612
சீனிவாசன் (பா.ம.க.) 17,328
அம்பத்தூர் (அ.தி.மு.க. வெற்றி)
வி.அலெக்சாண்டர் (அ.தி.மு.க.) 94,375
மவுலானா (காங்) 76,877
கே.என்.சேகர் (பா.ம.க.) 16,635
ஜெ.கான்ஸ்டான்டின் ரவீந்திரன்(தே.மு.தி.க.) 16,631
வெற்றி யார் கையில்?
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை தி.மு.க. 7 முறை வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க. கோட்டையாக இருந்த ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க. வெற்றிக்கனியை பெற்றது.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தாம்பரம், ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை தி.மு.க.வும், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை அ.தி.மு.க.வும் கைப்பற்றி சமநிலையில் உள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு இடையே கடும்போட்டி இருக்கும். தங்களுடைய பலத்தை நிரூபிக்க இந்த இரு கட்சிகளும் கடுமையாக போராட வேண்டியிருக்கும்
ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்து தொகுதி மக்கள் இடையே கேட்டபோது,"தொகுதியில் அவ்வப்போது அவரை பார்க்க முடிகிறது. கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்களுக்கு மட்டுமே தொகுதிக்கு வருகிறார். தொகுதி மக்களின் பெரும்பாலான குறைகள் நிறைவேற்றப்படவில்லை" என்றனர்.
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.என்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:&
கே.என்.ராமச்சந்திரன் (அ.தி.மு.க.) 5,45,820
ஜெகத்ரட்சகன் (தி.மு.க.) 4,43,174
மாசிலாமணி (ம.தி.மு.க.) 1,87,094
அன்பரசு (காங்கிரஸ்) 39,015