வாக்காளர்கள் | : | | 1550390 |
ஆண் | : | | 765811 |
பெண் | : | | 784513 |
திருநங்கை | : | | 66 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. எச்.ராஜா - பாரதிய ஜனதா கட்சி-233860
2. கார்த்தி சிதம்பரம் - காங்கிரஸ் -566104-வெற்றி
3. வே.பாண்டி - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-122534
4. வே.சக்திபிரியா - நாம் தமிழர் கட்சி -72240
5. சி.சினேகன் - மக்கள் நீதி மய்யம் -22931
6. கா.சரவணன் - பகுஜன் சமாஜ் கட்சி-5079
7. மு.பிரபாகரன் - தமிழ்நாடு இளைஞர் கட்சி-1231
8. அ.வெள்ளைத்துரை - எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம்-2553
9. எம்.சுப்பிரமணியன் என்ற முத்துராஜா - அகில இந்திய மக்கள் கழகம்-1283
10. அந்தோணி ஜேசுராஜ் - சுயேச்சை-1191
11. லெ.காசிநாதன் - சுயேச்சை-1789
12. நா.கார்த்தி - சுயேச்சை-1422
13. சி.சரவணன் - சுயேச்சை-2097
14. ரா.சிங்கத்துரை - சுயேச்சை-3976
15. சி.சிதம்பரம் - சுயேச்சை-1261
16. மு.சின்னைய்யா - சுயேச்சை-1248
17. ரா.செந்தமிழ்செல்வி - சுயேச்சை-3453
18. சி.செந்தில்குமார் - சுயேச்சை-4690
19. கு.செல்லக்கண்ணு - சுயேச்சை-3952
20. பா.செல்வராஜ் - சுயேச்சை-2485
21. ரா.நடராஜன் - சுயேச்சை-1284
22. மு.முகமதுரபீக் - சுயேச்சை-1441
23. அ.ராதாகிருஷ்ணன் - சுயேச்சை-905
24. மா.ராஜசேகர் - சுயேச்சை-2140
25. மு.ராஜா - சுயேச்சை-2869
26. பா.ராஜேந்திரன் - சுயேச்சை-11167
27.நோட்டா-9283
பல்வேறு அரசியல் சிறப்பினை கொண்டது, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி. இந்த தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 7 முறையும், த.மா.கா. 2 முறையும், தி.மு.க. 2 முறையும், அ.தி.மு.க. 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
முன்பு இந்த தொகுதியில், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையான்குடி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் ஆகிய சட்டசபை தொகுதிகள் இருந்தன.
தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், ஆலங்குடி ஆகிய 2 தொகுதிகளும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் இளையான்குடி தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. திருவாடானை தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்கள் விவரம்
1967–ம் ஆண்டு முதல் தேர்தலை சிவகங்கை தொகுதி சந்தித்தது. அந்த தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் தா.கிருட்டிணன், அதற்கு அடுத்து 1971–ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
1977– தேர்தலில் பெரியசாமி தியாகராஜனும் (அ.தி.மு.க.), 1980–ம் ஆண்டில் ஆர்.வி.சுவாமிநாதனும் (காங்.) வெற்றி பெற்றனர். 1984–ம் ஆண்டு நடந்த தேர்தலில் ப.சிதம்பரம் (காங்.) வெற்றி பெற்றார். 1989, 1991 தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளராகவும், 1996, 1998 தேர்தல்களில் த.மா.கா. வேட்பாளராகவும் போட்டியிட்டு ப.சிதம்பரம் வெற்றி பெற்றார்.
1999–ம் ஆண்டில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சனநாச்சியப்பன் வெற்றி பெற்றார். பின்னர் 2004, 2009 தேர்தல்களில் ப.சிதம்பரம் (காங்.) மீண்டும் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியை அ.தி.மு.க வென்றது. அக்கட்சி வேட்பாளர் செந்தில்நாதன் 4,75,993 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், அந்த தேர்தலில் ப.சிதம்பரம் போட்டியிடவில்லை. காங்கிரஸ் வேட்பாளராக அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் நிறுத்தப்பட்டார். சிவகங்கை தொகுதியில் இருந்து 7 முறை வெற்றி பெற்று ப.சிதம்பரம் எம்.பி. ஆகி உள்ளார். அவர் 5 முறை காங்கிரஸ் கட்சி சார்பிலும், 2 முறை த.மா.கா. சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தாண்டவமாடும் வறட்சி
சிவகங்கை தொகுதியை பொறுத்தவரை விவசாயமே இங்கு முக்கிய தொழில் ஆகும். ஆனால், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் நிலவுகிறது. பருவமழை பொய்ப்பதால் ஏராளமான கண்மாய்கள் வானம் பார்த்த பூமியாக வறண்டு கிடக்கின்றன. எனவே வறட்சி இங்கு முக்கிய பிரச்சினை ஆகும்.
மேலும் உரிய காலத்தில் வைகை மற்றும் பெரியாறு தண்ணீரும் கிடைப்பது இல்லை. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போய்விட்டது. இதனால் கங்கை–காவிரி– வைகை–குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பெரிய அளவிலான தொழிற்சாலைகளும் இல்லை. இதனால் விவசாயத்தை தவிர்த்து, அந்த தொகுதி மக்கள் வேலை தேடி வெளி இடங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும் நிலைதான் உள்ளது. எனவே இந்த தொகுதியில் வேலைவாய்ப்புகளை பெருக்கவும், தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவும் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.
2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.செந்தில்நாதன் வெற்றி பெற்றார். அந்த தேர்தல் முடிவு விவரம் வருமாறு:–
பி.ஆர்.செந்தில்நாதன் (அ.தி.மு.க) 4,75,993
சுப.துரைராஜ் (தி.மு.க.) 2,46,608
எச்.ராஜா (பா.ஜனதா) 1,33,763
கார்த்தி சிதம்பரம் 1,04,678
கிருஷ்ணன் (இந்திய கம்யூனிஸ்டு) 20,473
வாக்காளர்கள் எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி சிவகங்கை தொகுதியில் 15 லட்சத்து 29 ஆயிரத்து 698 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 7,56,734, பெண்கள் 7,72,905, மூன்றாம் பாலினத்தவர்–59.
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் விவரம் வருமாறு:–
திருமயம் 2,11,974
ஆலங்குடி 2,00,058
காரைக்குடி 2,95,852
திருப்பத்தூர் 2,77,808
சிவகங்கை 2,83,108
மானாமதுரை (தனி) 2,60,898
வெற்றி யார் கையில்?
2014 தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., இந்த தேர்தலில் தனது கூட்டணி கட்சியான பா.ஜனதாவுக்கு சிவகங்கை தொகுதியை ஒதுக்கி இருக்கிறது. கடந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கிய அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதே போல் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் களம் இறங்கியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேர்போகி பாண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கவிஞர் சினேகன், நாம் தமிழர் கட்சி சார்பில் சக்தி பிரியா உள்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். இந்த தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏராளமான புதிய வாக்காளர்களும் வாக்களிக்க காத்திருக்கிறார்கள். வேலைவாய்ப்பு மற்றும் விவசாய பிரச்சினை, குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கும் கட்சிக்கு வாக்களிப்போம் என அந்த தொகுதி மக்களில் பலர் தெரிவிக்கின்றனர். அவர்களின் கைகளில் இந்த தொகுதியின் வெற்றி இருக்கிறது என்றும் கூறலாம்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியுடன், அதில் அடங்கி உள்ள மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதிக்கும் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மாரியப்பன் கென்னடி வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே அந்த தொகுதி நாடாளுமன்ற தேர்தலுடன் தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மாரியப்பன் கென்னடி அ.ம.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் நாகராஜன் (அ.தி.மு.க.), இலக்கியதாசன் (தி.மு.க.) உள்பட மொத்தம் 13 பேர் மானாமதுரை இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, மானாமதுரை (தனி), காரைக்குடி, திருப்பத்தூர்,
திருமயம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:–
சிவகங்கை அ.தி.மு.க. வெற்றி
பாஸ்கரன் (அ.தி.மு.க.) 81,697
மேப்பல் சக்தி (தி.மு.க.) 75,061
மானாமதுரை (தனி) அ.தி.மு.க. வெற்றி
மாரியப்பன் கென்னடி 89,893
சித்திராசெல்வி (தி.மு.க.) 75,004
ராஜேந்திரன் (பா.ஜனதா) 3,493
காரைக்குடி (காங்கிரஸ் வெற்றி)
கே.ஆர்.ராமசாமி (காங்.) 67,043
கற்பகம் இளங்கோ (அ.தி.மு.க.) 51,470
திருப்பத்தூர் தி.மு.க. வெற்றி
கே.ஆர்.பெரியகருப்பன் (தி.மு.க.) 1,10,719
அசோகன் (அ.தி.மு.க.) 68,715
ஆசைசெல்வன் (நாம் தமிழர் கட்சி) 2,801
திருமயம் தி.மு.க. வெற்றி
சிவக்குமார் (தி.மு.க.) 61,744
நீலகண்டன் (அ.தி.மு.க.) 58,422
சுகந்தி (மார்க்சிஸ்ட் கம்யூ.) 5,702
ஆலங்குடி தி.மு.க. வெற்றி
மெய்ஆனந்தன் சிவா (தி.மு.க.) 72,992
ஞான கலைசெல்வன் (அ.தி.மு.க.) 63,051