வாக்காளர்கள் | : | | 1557910 |
ஆண் | : | | 775765 |
பெண் | : | | 782063 |
திருநங்கை | : | | 82 |
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019
------------------------------------
1. ந.நயினார் நாகேந்திரன் - பாரதிய ஜனதா கட்சி - 342821
2. கா.நவாஸ் கனி - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 469943 வெற்றி
3. வ.து.ந.ஆனந்த் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 141806
4. ஜா.விஜய பாஸ்கர் - மக்கள் நீதி மய்யம் - 14925
5. தி.புவனேஸ்வரி - நாம் தமிழர் கட்சி - 46385
6. கா.பஞ்சாட்சரம் - பகுஜன் சமாஜ் கட்சி - 3681
7. ஜி.கேசவ் யாதவ் - பூர்வாஞ்சல் ஜனதா கட்சி - 2883
8. ப.லோகநாதன் ப்ரகதிசல் - சமாஜ்வாதி - 1877
9. அ.அசன் அலி - சுயேச்சை - 1877
10. இ.அல்லாபிச்சை - சுயேச்சை - 883
11. எம்.ஆனந்தராஜ் - சுயேச்சை - 1460
12. செ.ஆனந்த் - சுயேச்சை - 4721
13. நா.கதிரவன் - சுயேச்சை - 1789
14. த.கருப்பசாமி - சுயேச்சை - 2283
15. பா.கிருஷ்ண ராஜா - சுயேச்சை - 980
16. கா.குருந்தப்பன் - சுயேச்சை - 4596
17. இ.தேவசித்தம் - சுயேச்சை - 4199
18. சு.பிரபாகரன் - சுயேச்சை - 1798
19. ச.முகமது அலி ஜின்னா - சுயேச்சை - 1460
20. க.ரஜினி காந்த் - சுயேச்சை - 3550
21. வ.விநாயக மூர்த்தி - சுயேச்சை - 1367
22. எச்.ஜவாஹிர் அலி - சுயேச்சை - 2296
23. ரா.ஜெயபாண்டி - சுயேச்சை - 1405
24. எவரும் இல்லை - 7595
ராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. 1942–ம் ஆகஸ்டு புரட்சி என்று அழைக்கப்படும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதி முக்கிய பங்கு வகித்தது. ராமேசுவரம், ஏர்வாடி, தேவிபட்டினம் உள்ளிட்ட புண்ணிய தலங்களும், பாம்பன் ரெயில் தூக்குப்பாலம், ரோடு பாலம் மற்றும் தனுஷ்கோடி, குந்துகால் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் இங்குள்ளன.
நீண்ட நெடிய கடலோர பகுதிகளை கொண்ட மாவட்டம் என்பதால், மீன்பிடி தொழில் முக்கியமானது. இதே போல் விவசாயமும் பிரதானமானது.
ராமநாதபுரம் தொகுதி
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இதுவரை 16 பொதுத்தேர்தல்களை சந்தித்து உள்ளது. தற்போது 17–வது தேர்தலை சந்திக்க இருக்கிறது.
முதலில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், கடலாடி, பரமக்குடி (தனி), அருப்புக்கோட்டை, மானாமதுரை ஆகிய 6 தொகுதிகள் இடம்பெற்று இருந்தன.
தொகுதி சீரமைப்புக்குப்பின் கடலாடி தொகுதி நீக்கப்பட்டது. மானாமதுரை தொகுதி சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அருப்புக்கோட்டை விருதுநகர் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது. அதே நேரத்தில் அந்த மாவட்டத்தில் திருச்சுழி தொகுதியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அறந்தாங்கி தொகுதியும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டன. தற்போது அந்த தொகுதியானது, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி (தனி), அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது.
வெற்றி பெற்ற கட்சிகள்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை நடந்து முடிந்த 16 நாடாளுமன்ற தேர்தல் களில் காங்கிரஸ் 6 முறையும்,
அ.தி.மு.க. 4 முறையும், தி.மு.க. 3 முறையும் வெற்றி பெற்றுள் ளன.
1951–ல் நாகப்ப செட்டியார், 1957–ல் சுப்பையா அம்பலம், 1962–ல் அருணாசலம் (இவர்கள் 3 பேரும் காங்கிரஸ்), 1967–ல் முகமது செரீப் (முஸ்லிம் யூனியன் லீக்), 1971–ல் மூக்கையா தேவர் (பார்வர்டு பிளாக்), 1977–ல் அன்பழகன் (அ.தி.மு.க.), 1980–ல் சத்தியேந்திரன் (தி.மு.க.), 1984, 1989, 1991 ஆகிய 3 முறையும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜேஸ்வரன், 1996–ல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட உடையப்பன், 1998–ல் சத்தியமூர்த்தி (அ.தி.மு.க.), 1999–ல் மலைச்சாமி
(அ.தி.மு.க.), 2004–ல் தி.மு.க. வேட்பாளர் பவானி ராஜேந்திரன், 2009–ல் தி.மு.க. ரித்தீஸ் என்ற சிவக்குமாரும் வெற்றி பெற்றனர்.
கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற 16–வது நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட
அ.தி.மு.க. வேட்பாளர்
அன்வர்ராஜா, 4 லட்சத்து
5 ஆயிரத்து 945 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி போட்டியிடுகிறார். மற்றொரு புறம் பா.ஜ.க.– அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் களமிறங்கியுள்ளார். அ.ம.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் வது.நடராஜனின் மகனான ஆனந்தும், மக்கள் நீதி மய்யம் சார்பில் விஜயபாஸ்கரும், நாம் தமிழர் கட்சி சார்பில் புவனேசுவரியும் போட்டியிடுகின்றனர்.
பரமக்குடிக்கு இடைத்தேர்தல்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியும் தற்போது இடைத்தேர்தலை சந்திக்க இருக்கிறது. 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் பரமக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் முத்தையா, டி.டி.வி. தினகரன் அணிக்கு மாறியதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் காலியான அந்த தொகுதிக்கு, தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் மாவட்டம் ராமநாதபுரம் ஆகும். பத்திரப்பதிவு முறையில் மாற்றம் கொண்டு வராமல் இருந்திருந்தால் மாவட்டத்தில் மிச்ச சொச்ச நிலங்களும் விலை பேசப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்று அந்த பகுதி மக்கள் வேதனையோடு கூறும் அளவுக்கு, வறண்ட மாவட்டம் என்ற பெயரை வாங்கி விட்டது. இந்த மாவட்டத்தின் ஒரே வரப்பிரசாதம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ஆகும். அந்த திட்டமும் முறையான பராமரிப்பின்றி போனதால் பல இடங்களில் குடிதண்ணீர் பிரச்சினை நீடிக்கிறது. இந்த திட்டத்தினை விரிவாக்கம் செய்து முழுமையாக செயல்படுத்தி இருந்தாலே மக்களின் தண்ணீர் தேவை தீர்க்கப்பட்டிருக்கும் என்பது மக்களின் கருத்தாகும்.
2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அன்வர் ராஜா வெற்றி பெற்றார். அந்த தேர்தல் முடிவு
விவரம் வருமாறு:–
அன்வர்ராஜா (அ.தி.மு.க.) 4,05,945
அப்துல்ஜலீல் (தி.மு.க.) 2,86,621
குப்புராமு (பா.ஜ.க.) 1,71,082
திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) 62,160
உமாமகேஸ்வரி(இந்திய கம்யூனிஸ்டு) 12,640
வாக்காளர்கள் எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15,52,761 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 7,73,036, பெண்கள் 7,79,643, மூன்றாம் பாலினத்தினர் 82.
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை விவரம் வருமாறு:–
ராமநாதபுரம் 2,92,139
பரமக்குடி 2,49,402
திருவாடானை 2,78,086
முதுகுளத்தூர் 3,02,962
அறந்தாங்கி 2,19,390
திருச்சுழி 2,10,782
வெற்றி யார் கையில்?
ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய பிரச்சினை, மீனவ மக்களின் பிரச்சினை ஆகும். இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்படுவதையும், சிறைபிடிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட கால கோரிக்கை. அதே போல் கச்சத்தீவை மீட்போம் என்ற உறுதியை ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பு சொல்வதும், அதன் பின்பு அதை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று கடந்த மத்திய பட்ஜெட்டின் போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே மீனவர் சார்ந்த பிரச்சினைகளும், வாக்குறுதிகளும் ராமநாதபுரம் தேர்தலில் எதிரொலிக்கும். இந்த மாவட்ட மக்களின் மற்றொரு முக்கியமான கோரிக்கை சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ரெயில்விட வேண்டும் என்பதுதான். இதே போல் நீர் நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் உள்ளன. அதே நேரத்தில் இளம் வாக்காளர்களின் ஓட்டுகளை பெருவாரியாக பெறும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், பரமக்குடி(தனி), திருவாடானை, முதுகுளத்தூர், திருச்சுழி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:–
ராமநாதபுரம் (அ.தி.மு.க.வெற்றி)
டாக்டர் மு.மணிகண்டன்(அ.தி.மு.க.) 89,365
ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) 56,143
சிங்கை ஜின்னா(தே.மு.தி.க.) 16,153
பரமக்குடி (தனி) (அ.தி.மு.க. வெற்றி)
டாக்டர் முத்தையா 79,254
திசைவீரன்(தி.மு.க.) 67,865
பாலகணபதி (பா.ஜ.க.) 9,537
திருவாடானை (அ.தி.மு.க. வெற்றி)
நடிகர் கருணாஸ் (அ.தி.மு.க.) 76,786
சுப.த.திவாகரன் (தி.மு.க.) 68,090
தேவேந்திரன் யாதவ்(பா.ஜ.க.) 11,842
முதுகுளத்தூர் (காங்கிரஸ் வெற்றி)
மலேசியா பாண்டியன் (காங்கிரஸ்) 93,946
கீர்த்திகா முனியசாமி (அ.தி.மு.க.) 81,596
ராஜ்குமார் (ம.தி.மு.க) 8,800
திருச்சுழி (தி.மு.க. வெற்றி)
தங்கம் தென்னரசு (தி.மு.க.) 89,927
தினேஷ்பாபு (அ.தி.மு.க.) 63,350
ராஜூ(தே.மு.தி.க.) 5,799
அறந்தாங்கி (அ.தி.மு.க. வெற்றி)
ரெத்தினசபாபதி (அ.தி.மு.க.) 69,905
ராமச்சந்திரன் (காங்கிரஸ்) 67,614
லோகநாதன் (இந்திய கம்யூனிஸ்டு) 6,341