வாக்காளர்கள் | : | | 1303060 |
ஆண் | : | | 642863 |
பெண் | : | | 660157 |
திருநங்கை | : | | 40 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. சரவணன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 311539
2. செல்வராசு - இந்திய கம்யூனிஸ்டு - 522892 வெற்றி
3. அனிதா - பகுஜன் சமாஜ் கட்சி - 5412
4.செங்கொடி - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 70307
5. மாலதி - நாம் தமிழர் கட்சி - 51448
6. குருவையா - மக்கள் நீதி மய்யம் - 14503
7. அம்பிகாபதி - மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி - 2906
8. வேதரத்தினம் - ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி - 895
9. ஜெயலெட்சுமி - தமிழ்நாடு இளைஞர் கட்சி - 1178
10. சம்பத் - சுயேச்சை - 1686
11. சம்பத்குமார் - சுயேச்சை - 2101
12. சிவக்குமார் - சுயேச்சை - 1268
13. சவுந்தரராஜன் - சுயேச்சை - 1090
14. பிரேம் - சுயேச்சை - 3118
15. ஜெகதீஷ் - சுயேச்சை - 2402
16. எவரும் இல்லை - 9463
நாகை பாராளுமன்ற தொகுதி விவசாய தொழிலாளர்களும், மீனவர்களும் அதிகம் உள்ள தொகுதியாகும். நாகை பாராளுமன்ற தொகுதியில் நாகப்பட்டினம், வேதாரண்யம், நன்னிலம்(தனி), திருவாரூர்(தனி), திருத்துறைப்பூண்டி(தனி), மன்னார்குடி ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்று இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்குப்பின்னர் மன்னார்குடி தொகுதி தஞ்சை நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டது. இதற்கு பதிலாக கீழ்வேளூர்(தனி) தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு நாகை நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டது. மேலும் தனி தொகுதியாக இருந்த திருவாரூர், நன்னிலம் சட்டசபை தொகுதிகள் பொது தொகுதியாக மாற்றப்பட்டு விட்டது.
1957–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரை 15 பொதுத்தேர்தல்களையும், ஒரு இடைத்தேர்தலையும் சந்தித்துள்ளன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 6 முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
நாகை பாராளுமன்ற தொகுதி 1957–ல் இரட்டை தொகுதியாக இருந்தது. அப்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சம்பந்தன், அய்யாக்கண்ணு ஆகியோர் வெற்றி பெற்றனர். 1962–ல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கோபால்சாமி தென்கொண்டார், 1967–ல் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சாம்பசிவம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
1971–ல் நடந்த தேர்தலில் காத்தமுத்து, 1977–ல் நடந்த தேர்தலில் முருகையன், 1979–ல் நடந்த இடைத்தேர்தலில் முருகையன் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 1980–ல் நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தாழை.மு.கருணாநிதி வெற்றிபெற்றார். 1984–ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் வெற்றி பெற்றார். 1989–ல் நடந்த தேர்தலில் செல்வராஜ் வெற்றி பெற்றார். 1991–ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் பத்மா வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1996, 1998–ல் நடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட செல்வராஜ் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1999, 2004–ல் நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.எஸ்.விஜயன் வெற்றி பெற்றார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட கோபால் 1 லட்சத்து 6 ஆயிரத்து 79 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.எஸ்.விஜயனை தோற்கடித்தார்
தீர்க்கப்படாத பிரச்சினை
நாகை தொகுதியை பொறுத்தவரை 95 சதவீதம் விவசாயத்தையே நம்பி உள்ளனர். இங்கு நெல், மல்லிகை உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த 7 ஆண்டுகளாக காவிரியில் சரியாக தண்ணீர் வராததாலும், போதிய அளவு மழை பெய்யாததாலும் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயல் காரணமாக இந்த தொகுதியில் உள்ள வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி தொகுதிகள் அடியோடு பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீள முடியாமல் உள்ளனர். நாகை தொகுதியில் வெள்ளப்பள்ளம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மீனவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அக்கரைப்பேட்டை செல்லும் சாலையில் தோணித்துறை ரெயில்வே மேம்பால பணிகள் நீண்ட நாட்களாக ஆமைவேகத்தில் நடைபெறுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புத்தூர் ரெயில்வே மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டு விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பாலம் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருவாரூர் தொகுதியில் வேளாண்மை கல்லூரி இல்லை. திருவாரூரில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் இல்லை. திருவாரூரில் சென்னைக்கு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மன்னார்குடியில் இருந்து கோவைக்கு செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவாரூர் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும். திருவாரூர் பகுதியில் நிலத்தடிநீர் உப்புநீராக மாறி வருகிறது. எனவே தொகுதி முழுவதும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. அதை குறைக்க ரெயில்வே மேம்பாலம், புறவழிச்சாலை ஏற்படுத்த வேண்டும். கீழ்வேளூர் பகுதியில் பஸ் நிலையம் கட்ட வேண்டும். வேதாரண்யம் பகுதிக்கு 30 ஆண்டாக ரெயில் போக்குவரத்து இல்லை. மீனவர்கள் நலன் காக்க கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும். இங்கு உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது சார்ந்த தொழிற்சாலை தொடங்க வேண்டும். மல்லிகைப்பூ, மாம்பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே இது தொடர்பான தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் போன்றவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் (தனி)
தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோபால் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:–
டாக்டர் கோபால் (அ.தி.மு.க.) 4,34,174
ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.) 3,28,095
பழனிச்சாமி (இ.கம்யூ) 90,313
வடிவேல் ராவணன் (பா.ம.க.) 43,506
செந்தில்பாண்டியன் (காங்கிரஸ்) 23,967
வாக்காளர்கள் எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி நாகை நாடாளுமன்ற தொகுதியில் 12,92,658 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6,38,726, பெண் வாக்காளர்கள் 6,53,895. மூன்றாம் பாலினத்தவர் 37.
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:–
நாகை 1,87,817
கீழ்வேளூர் 1,68,678
வேதாரண்யம் 1,82,959
திருவாரூர் 2,66,159
நன்னிலம் 2,58,377
திருத்துறைப்பூண்டி 2,28,668
வெற்றி யார் கையில்?
------------------------
நாகை நாடாளுமன்ற தொகுதியில் நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, கீழ்வேளூர், திருவாரூர், நன்னிலம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் நன்னிலம், வேதாரண்யம், நாகை(அ.தி.மு.க. கூட்டணி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சி) ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க. வசமும், கீழ்வேளூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய தொகுதிகள் தி.மு.க. வசமும் உள்ளது. திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி மரணம் அடைந்தார். இதனால் நாடாளுமன்ற தேர்தலோடு, திருவாரூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
சட்டசபை தொகுதிகளின் வெற்றியை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால் தி.மு.க.–
அ.தி.மு.க. பலம் சமமாக உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக தாழை.சரவணன் போட்டியிடுகிறார். நன்னிலம், வேதாரண்யம், நாகை தொகுதிகளில் அ.தி.மு.க., அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜனதா, த.மா.கா., புதிய தமிழகம் என கூட்டணி கட்சிகளின் அணிவகுப்பை பார்த்தால் அ.தி.மு.க. வேட்பாளருக்கு பலம் அதிகரித்துள்ளது. மேலும் அ.தி.மு.க. வசம் உள்ள இந்த தொகுதியை மீண்டும் தக்க வைக்கும் முயற்சியில் அ.தி.மு.க. தீவிர பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக எம்.செல்வராசு போட்டியிடுகிறார். தி.மு.க.வை பொறுத்தவரை திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதே போல் திருத்துறைப்பூண்டி, கீழ்வேளூர் தொகுதியிலும் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. மேலும் தி.மு.க.வுக்கு காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி பலம் இருப்பதால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு பலம் அதிகரித்துள்ளது.
இது தவிர அ.ம.மு.க. சார்பில் செங்கொடி, நாம் தமிழர் கட்சி சார்பில் மாலதி, மக்கள் நீதி மய்யம் சார்பில் குருவையா ஆகியோரும் களத்தில் உள்ளனர். இதனால் வாக்குகள் சிதறும் வாய்ப்பு உள்ளது. எனவே நாகை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிக்கனியை பறிக்க
அ.தி.மு.க.–இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் கடுமையாக மல்லுக்கட்டும் என்றே தெரிகிறது.
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றிருக்கும்
6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:–
திருவாரூர் (தி.மு.க. வெற்றி)
மு.கருணாநிதி (தி.மு.க.) 1,21,473
பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) 53,107
மாசிலாமணி (இ.கம்யூ) 13,158
சிவக்குமார் (பா.ம.க.) 1,787
நன்னிலம் (அ.தி.மு.க. வெற்றி)
ஆர்.காமராஜ் (அ.தி.மு.க.) 1,00,918
துரைவேலன் (காங்கிரஸ்) 79,642
சுந்தரமூர்த்தி (மா.கம்யூ) 11,327
இளவரசன் (பா.ம.க.) 5,060
திருத்துறைப்பூண்டி (தி.மு.க. வெற்றி)
ஆடலரசன் (தி.மு.க.) 72,127
உமாமகேஸ்வரி (அ.தி.மு.க.) 58,877
உலகநாதன் (இ.கம்யூ) 33,038
உதயகுமார் (பா.ஜனதா) 3,937
நாகப்பட்டினம் (அ.தி.மு.க. கூட்டணி
கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சி வெற்றி)
தமிமுன் அன்சாரி (அ.தி.மு.க. கூட்டணி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சி வெற்றி) – 64,903
முகமது ஜபருல்லா (தி.மு.க. கூட்டணி கட்சியான
மனிதநேய மக்கள் கட்சி) 44,353
தமீம் அன்சாரி (இ.கம்யூ) 11,088
நேதாஜி (பா.ஜ.க.) 8005
கீழ்வேளுர் (தி.மு.க. வெற்றி)
மதிவாணன் (தி.மு.க.) 61,999
மீனா (அ.தி.மு.க.) 51,829
நாகை மாலி (மா.கம்யூ) 16,449
வனிதா (பா.ம.க.) 2,637
வேதாரண்யம் (அ.தி.மு.க. வெற்றி)
ஒ.எஸ்.மணியன் (அ.தி.மு.க.) 60,836
பி.வி.ராஜேந்திரன் (காங்கிரஸ்) 37,836
வேதரத்தினம் (பா.ஜ.க.) 37,086
வைரவநாதன் (தே.மு.தி.க.) 4,594