வாக்காளர்கள் | : | | 1526348 |
ஆண் | : | | 772614 |
பெண் | : | | 753498 |
திருநங்கை | : | | 236 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. கே.பி.முனுசாமி - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 454533
2. டாக்டர் செல்லகுமார் - இந்திய தேசிய காங்கிரஸ் - 611298 (வெற்றி)
3. கணேசகுமார் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 8867
4. மதுசூதனன் - நாம் தமிழர் கட்சி - 28000
5. ஸ்ரீகாருண்யா சுப்பிரமணியம் - மக்கள் நீதி மய்யம் - 16995
6. அஸ்லம்ரஹ்மான் ஷெரீப் - சுயேச்சை - 802
7. ஏஜாஸ் - சுயேச்சை - 679
8. காந்தி - சுயேச்சை - 921
9. குப்பன் - சுயேச்சை - 1054
10. குமரேசன் - சுயேச்சை - 1234
11.கோவிந்தன் - சுயேச்சை - 5350
12. தேவப்பா - சுயேச்சை - 1506
13. நாகேஷ் - சுயேச்சை - 1613
14. மீனா - சுயேச்சை - 2553
15. சீனிவாசா - சுயேச்சை - 5895
16. எவரும் இல்லை - 19545
வாக்காளர்கள் எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 10 ஆயிரத்து 85 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 65 ஆயிரத்து 26, பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 44 ஆயிரத்து 835, மூன்றாம் பாலினத்தினர் 224. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
ஊத்தங்கரை (தனி).......................2,25,148
பர்கூர்..........................................2,34,572
கிருஷ்ணகிரி................................2,51,821
வேப்பனப்பள்ளி............................2,36,415
ஓசூர்...........................................3,22,919
மாங்கனிக்கு பெயர் போன கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி கடந்த 1957&ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்று முதல் 2011&ம் ஆண்டு வரையில் அதன் அடிப்படையிலேயே இந்த தொகுதி தேர்தலை சந்தித்து வந்தது. கடந்த 2011&ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின் படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உருவானது. இதைத்தொடர்ந்து கடந்த 2014&ம் ஆண்டு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் இருந்து இந்த தொகுதியில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
6 முறை காங்கிரஸ் வெற்றி
கிருஷ்ணகிரி தொகுதியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது இது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே விளங்கி உள்ளது. 6 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை தி.மு.க.வும், 3 முறை அ.தி.மு.க.வும், ஒரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக மறைந்த முன்னாள் மத்திய மந்திரி வாழப்பாடி ராமமூர்த்தி இதே தொகுதியில் தொடர்ந்து 4 முறை காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றுள்ளார். அதே போல தி.மு.க. 1999, 2004, 2009 என 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.
இந்த நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ஆர். நரசிம்மன் வெற்றி பெற்றார். 1962&ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட க.ராசாராம் வெற்றி வாகை சூடினார். 1967-ம் ஆண்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.கமலநாதனும், 1971&ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டி.தீர்த்தகிரி கவுண்டரும் வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து 1977-ம் ஆண்டில் அ.தி.மு.க.வில் போட்டியிட்ட பி.வி.பெரியசாமி வெற்றி வாகை சூடினார். 1980, 1984, 1989 ஆகிய 3 நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாழப்பாடி ராமமூர்த்தி போட்டியிட்டு 3 முறையும் தொடர்ச்சியாக ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றார்.
இதன் தொடர்ச்சியாக 1991-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வாழப்பாடி ராமமூர்த்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து 1996-ல் த.மா.கா. சார்பில் போட்டியிட்ட நரசிம்மன் வெற்றி பெற்றார். 1998-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி வெற்றி பெற்றார். 1999-ல் தி.மு.க.வை சேர்ந்த வெற்றிச்செல்வனும், 2004, 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் தி.மு.க.வின் இ.ஜி.சுகவனமும், வெற்றி பெற்றனர்.
கடந்த 2014-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அசோக்குமார் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அசோக்குமார் 4,80,491 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சின்ன பில்லப்பா (தி.மு.க.) 2,73,900 வாக்குகளும் பெற்றனர். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணி 2 லட்சத்து 24 ஆயிரத்து 963 வாக்குகள் பெற்றிருந்தார்.
வருகிற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமி போட்டி யிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
தீர்க்கப்படாத பிரச்சினைகள்
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் வன்னியர்கள் அதிகமாக உள்ளனர். அடுத்தபடியாக வெள்ளாள கவுண்டர்களும், ஆதி திராவிடர் களும் உள்ளனர். இதே போல ஒக்கலிக்க கவுடா, ரெட்டி, தெலுங்கு செட்டியார், நாயுடு, சிறுபான்மை இனத்தவர்களான முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இந்த தொகுதியில் பரவலாக உள்ளனர்.
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை (தனி), தளி ஆகிய சட்டசபை தொகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாகவும், ஓசூர் தொகுதி தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதியாகவும், வேப்பனப்பள்ளி தொகுதி ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையில் உள்ள பிற்பட்ட பகுதியாகவும் உள்ளது.
ஓசூர் பகுதியில் தொழிற்சாலைகள் ஏராளமாக இருந்தாலும், இந்த தொகுதி மக்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்குத்தான் அதிகம் செல்கிறார்கள். மாவட்ட தலைநகராக உள்ள கிருஷ்ணகிரிக்கு ரெயில் போக்குவரத்து வசதி இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் துண்டிக்கப்பட்ட ரெயில் போக்குவரத்து மீண்டும் கிருஷ்ணகிரி பகுதியில் தொடங்கப்படாமல் உள்ளது. நீண்ட காலமாக இந்த மாவட்ட மக்கள் ஜோலார்பேட்டை முதல் கிருஷ்ணகிரி, சூளகிரி வழியாக ஓசூர் வரை புதிய ரெயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்களும் இந்த கோரிக்கையை பிரதானமாக வைத்து பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணகிரிக்கு ரெயில் போக்குவரத்து என்பது நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே உள்ளது.
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2016&ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:
-
ஊத்தங்கரை (தனி) (அ.தி.மு.க. வெற்றி)
மனோரஞ்சிதம் நாகராஜ் (அ.தி.மு.க.)................. 69,980
டாக்டர் மாலதி (தி.மு.க.)...................................7,367
அங்குத்தி (பா.ம.க.) ...................................23,500
கனியமுதன் (விடுதலை சிறுத்தைகள்) ............... 12,669
பர்கூர் (அ.தி.மு.க. வெற்றி)
சி.வி.ராஜேந்திரன் (அ.தி.மு.க.).......................... 80,650
கோவிந்தராசன் (தி.மு.க.).................................. 79,668
ஏ.குமார் (பா.ம.க.)...................................... 18,407
ஆர்.ராஜேந்திரன் (த.மா.கா)................................. 2,948
கிருஷ்ணகிரி (தி.மு.க.வெற்றி)
டி.செங்குட்டுவன் (தி.மு.க.)................................ 87,657
வி.கோவிந்தராஜ் (அ.தி.மு.க.)............................ 82,746
எஸ்.குமார் (பா.ம.க.).................................... 15,736
ஜெயப்பிரகாஷ் (த.மா.கா).................................4,199
வேப்பனப்பள்ளி (தி.மு.க. வெற்றி)
பி.முருகன் (தி.மு.க.)................................88,952
மது என்கிற ஹேம்நாத் (அ.தி.மு.க.)....................83,724
தமிழ்ச்செல்வி (பா.ம.க)..........................5,476
நாகராஜ் (தே.மு.தி.க.).................................4,656
ஓசூர் (அ.தி.மு.க. வெற்றி)
பாலகிருஷ்ணரெட்டி (அ.தி.மு.க.).........................89,510
கோபிநாத் (காங்கிரஸ்)..................................66,546
பாலகிருஷ்ணன் (பா.ஜனதா)................................28,850
முனிராஜ் (பா.ம.க.).....................................10,309
தளி (தி.மு.க. வெற்றி)
ஒய்.பிரகாஷ் (தி.மு.க.)..............................74,429
டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி)........68,184
நாகேஷ் (அ.தி.மு.க.)..............................31,415
அருண்ராஜன் (பா.ம.க.)..........................5,253
வெற்றி யார் கையில்?
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த கிருஷ்ணகிரி தொகுதியில், கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் அந்த வெற்றியை இந்த முறையும் அ.தி.மு.க. தக்க வைக்குமா? என்பது கேள்விக்குறிதான். கடந்த 2016&ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஊத்தங்கரை, பர்கூர், ஓசூர் ஆகிய 3 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, தளி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க.வும் வெற்றி பெற்று சம பலத்துடன் இருந்தது.
தற்போது ஓசூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த பாலகிருஷ்ணரெட்டி வழக்கு ஒன்றில் தண்டனை பெற்றதால் அவரது எம்.எல்.ஏ. பதவி போனது. இதனால் ஓசூர் தொகுதி காலியாக உள்ளது. தற்போது இந்த சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதன்காரணமாக அ.தி.மு.க.வின் பலம் தற்போது 2 ஆக உள்ளது. இதனால் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. & தி.மு.க. இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 512 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே இளம் மற்றும் புதிய வாக்காளர்கள் தான் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றியை தீர்மானிக்க போகும் சக்தியாக விளங்குகிறார்கள்.
அ.தி.மு.க. எம்.பி.யின் 5 ஆண்டு செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, Òகிருஷ்ணகிரி தொகுதி மக்களின் 75 ஆண்டு கால கனவாக உள்ள கிருஷ்ணகிரிக்கு ரெயில் பாதை கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை ஓசூர் & கிருஷ்ணகிரி & ஜோலார்பேட்டை ரெயில்பாதை திட்டத்தை தொடங்க எந்த நடவடிக்கையும் இந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்படவில்லை. கிருஷ்ணகிரி தொகுதி வளர்ச்சிக்காக திட்டங்கள் கொண்டு வந்தாலும், மாவட்ட மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த ரெயில் பாதை திட்டம் இன்னும் கொண்டு வரப்படவில்லைÓ என்றனர்.
2014&ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 2கே.அசோக்குமார் வெற்றி பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:&
கே.அசோக்குமார் (அ.தி.மு.க.).....................4,80,491
சின்ன பில்லப்பா (தி.மு.க.) ..........................2,73,900
ஜி.கே.மணி (பா.ம.க.)..................................2,24,963
செல்லக்குமார் (காங்கிரஸ்).............................38,855
தளி..................................2,39,210