வாக்காளர்கள் | : | | 1643656 |
ஆண் | : | | 805932 |
பெண் | : | | 837551 |
திருநங்கை | : | | 173 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. மரகதம் குமரவேல் - அண்ண திராவிட முன்னேற்ற கழகம்-397372
2. ஜி.செல்வம் - திராவிட முன்னேற்ற கழகம் -684004-வெற்றி
3. முனுசாமி - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் -55213
4. சிவரஞ்சனி - நாம் தமிழர் கட்சி-62771
5. சேகர்- பகுஜன் சமாஜ் கட்சி-5018
6. தேவராஜன் - சுயேச்சை-1312
7. ரமேஷ் - சுயேச்சை-2243
8. இளங்கோவன் - சுயேச்சை-2272
9. வினோத்ராஜ் - சுயேச்சை-1597
10. ஜெயராமன் - சுயேச்சை-2509
11. மரகதம் - சுயேச்சை-1640
12.நோட்டா-21661
கோவில் நகரம் என்ற சிறப்பை பெற்ற காஞ்சீபுரம், பட்டு உற்பத்தியில் உலக அளவில் பிரசித்திபெற்ற நகரமாக பெருமை சேர்க்கிறது. 2008–ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது புதிதாக உதயமான தொகுதி காஞ்சீபுரம் (தனி). அதற்கு முன்பு செங்கல்பட்டு தொகுதியாக அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த தொகுதியில் திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சீபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. 1952–ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வந்த செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ் தலா 4 முறையும், தி.மு.க. 3 முறையும், பா.ம.க. 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளரும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார்.
2008–ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, செங்கல்பட்டு தொகுதி காஞ்சீபுரம் (தனி) தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றது. புதிதாக உதயமான காஞ்சீபுரம் (தனி) தொகுதியில், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 2009–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பெ.விஸ்வநாதன், அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராமகிருஷ்ணனை 13,103 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஜி.செல்வத்தை 1,46,866 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
காஞ்சீபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் 2011–ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தாழ்த்தப்பட்ட மக்கள் 29.92 சதவீதமும், பழங்குடியினர் 1.51 சதவீதமும் வசிக்கின்றனர். இந்துக்கள் 90 முதல் 95 சதவீதம் வரை உள்ளனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதம், சீக்கியர்கள், ஜெயின் சமூகத்தினர் தலா பூஜ்ஜியம் முதல் 5 சதவீதம் வரை உள்ளனர். கல்வி அறிவு பெற்றவர்கள் சதவீதம் 79.44 ஆக உள்ளது.
தீர்க்கப்படாத பிரச்சினை
காஞ்சீபுரம் பகுதியில் முக்கியத் தொழிலாக விளங்கும் நெசவுத் தொழில், தற்போது நலிவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ‘பட்டுப் பூங்கா’ இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. மாமல்லபுரம் கடற்கரை கோவில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்ற சுற்றுலா ஸ்தலங்கள் மேம்படுத்தப்படவில்லை. கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் புராதன கோவில்கள் பல இருந்தும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
இருக்கின்ற ஏரிகளும் முறையாக தூர்வாரப்படாததால், விவசாயமும் பொய்த்துவிட்டது. கல்வி நிறுவனங்கள் அதிகம் இருந்தும் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லை. அறிஞர் அண்ணாவின் கனவாகிய பெரும் தொழிற்சாலைகள் என்பது காஞ்சீபுரத்தில் இன்றைக்கும் வந்தபாடில்லை. அண்ணாவின் பெயரைச் சொல்லும் இரு பிரதான கட்சிகளும், அவரது கனவை நனவாக்க முயற்சி எடுக்கவில்லை. மாவட்டத்துக்கு தலைநகரமாக விளங்கும் காஞ்சீபுரத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் இயங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் நிறைவேறவில்லை. இப்படி, ‘‘இல்லை.. இல்லை..’’ என்ற வார்த்தைகளே காஞ்சீபுரம் தொகுதி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
***
2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:–
கே.மரகதம் குமரவேல் (அ.தி.மு.க.) 4,99,395
ஜி.செல்வம் (தி.மு.க.) 3,52,529
மல்லை சத்யா (ம.தி.மு.க.) 2,07,080
பி.விஸ்வநாதன் (காங்கிரஸ்) 33,313
ஜே.எஸ்.சத்தியராஜ் (பகுஜன் சமாஜ்) 6,807
***
வெற்றி யார் கையில்?
காஞ்சீபுரம் (தனி) தொகுதிகளில் கடந்த முறை (2014) அ.தி.மு.க. நீண்ட இடைவெளிக்கு பின் வெற்றியை பதிவு செய்துள்ளது. 1998–ம் ஆண்டுக்கு பிறகு 2014–ம் ஆண்டு தேர்தலில் தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ளுமா? என்பது கேள்விக்குறி தான்.
2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு, செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சீபுரம் ஆகிய 5 தொகுதிகளில் தி.மு.க.வே வெற்றி பெற்று அசுர பலத்துடன் இருக்கிறது. திருப்போரூர் தொகுதி மட்டும் அ.தி.மு.க. வசம் உள்ளது. ஆனால், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்ததால், திருப்போரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோதண்டபாணி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, அந்தத் தொகுதியும் காலியாக உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது, காஞ்சீபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வின் கையே ஓங்கியிருக்கிறது. அதனால், நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கும் அ.தி.மு.க. போராட வேண்டியது இருக்கும். அதேபோல், திருப்போரூர் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கும் அ.தி.மு.க. பாடாய் பட வேண்டியிருக்கும்.
2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, காஞ்சீபுரம் தொகுதியில் மொத்தம் 14,41,391 வாக்காளர்கள் இருந்தனர். அடுத்த 5 ஆண்டுகளில் 1,77,927 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். முதல்முறை வாக்களிக்கப்போகும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 45,139 ஆகும். எனவே, இளம் வாக்காளர்களின் முதல் ஓட்டும் இந்தத் தேர்தலில் முத்திரை பதிக்கக்கூடியதாக அமையும்.
காஞ்சீபுரம் (தனி) தொகுதி எம்.பி.யின் 5 ஆண்டுகால செயல்பாடு குறித்து மக்களிடம் கேட்டபோது, ‘‘ஓட்டு கேட்டு வந்தபோதே எம்.பி.யிடம் நிறைய கோரிக்கைகளை முன்வைத்தோம். அவரும் வெற்றி பெற்றால் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், சொன்னபடி எதையும் நிறைவேற்றித்தரவில்லை. அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மட்டும் தான் அவரை பார்க்க முடிகிறது. மக்களிடம் குறைகள் கேட்க தொகுதி பக்கம் வந்ததே இல்லை’’ என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
***
வாக்காளர்கள் எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி, காஞ்சீபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் 16,19,318 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 7,94,839, பெண் வாக்காளர்கள் 8,24,316, 3–ம் பாலினத்தினர் 163.
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:–
செங்கல்பட்டு 3,88,782
திருப்போரூர் 2,65,166
செய்யூர் (தனி) 2,13,963
மதுராந்தகம் (தனி) 2,16,310
உத்திரமேரூர் 2,44,702
காஞ்சீபுரம் 2,90,395
***
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, காஞ்சீபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:–
செங்கல்பட்டு (தி.மு.க. வெற்றி)
ம.வரலட்சுமி மதுசூதனன் (தி.மு.க.) 1,12,675
ஆர்.கமலக்கண்ணன் (அ.தி.மு.க.) 86,383
கே.ஆறுமுகம் (பா.ம.க.) 20,899
டி.முருகேசன் (தே.மு.தி.க.) 17,438
திருப்போரூர் (அ.தி.மு.க. வெற்றி)
எம்.கோதண்டபாணி (அ.தி.மு.க.) 70,215
வெ.விஸ்வநாதன் (தி.மு.க.) 69,265
கே.வாசு (பா.ம.க.) 28,125
சி.இ.சத்யா (ம.தி.மு.க.) 25,539
செய்யூர் (தனி) (தி.மு.க. வெற்றி)
டாக்டர் ஆர்.டி.அரசு (தி.மு.க.) 63,446
ஏ.முனுசாமி (அ.தி.மு.க.) 63,142
எழில் கரோலின் (வி.சி.க.) 17,927
சடையப்பன் (பா.ம.க.) 17,892
மதுராந்தகம் (தனி) (தி.மு.க. வெற்றி)
புகழேந்தி (தி.மு.க.) 73,693
செ.கு.தமிழரசன் (இ.கு.க.) 70,736
ஆதிகேசவன் (பா.ம.க.) 16,215
எம்.தென்னரசு (தே.மு.தி.க.) 11,773
உத்திரமேரூர் (தி.மு.க. வெற்றி)
க.சுந்தர் (தி.மு.க.) 85,513
பா.கணேசன் (அ.தி.மு.க.) 73,357
பொன்.கங்காதரன் (பா.ம.க.) 24,221
எம்.ராஜேந்திரன் (தே.மு.தி.க.) 9,184
காஞ்சீபுரம் (தி.மு.க. வெற்றி)
சி.வி.எம்.பி.எழிலரசன் (தி.மு.க.) 90,533
மைதிலி திருநாவுக்கரசு (அ.தி.மு.க.) 82,985
பி.மகேஷ்குமார் (பா.ம.க.) 30,102
எஸ்.ஏகாம்பரம் (தே.மு.தி.க.) 8,986