வாக்காளர்கள் | : | | 1540495 |
ஆண் | : | | 753497 |
பெண் | : | | 786840 |
திருநங்கை | : | | 158 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. அரசூர் எஸ்.மனோகரன் - பகுஜன் சமாஜ் கட்சி - 5704
2. வேலுசாமி.பி - திராவிட முன்னேற்ற கழகம் - 746523 (வெற்றி)
3. ஜோதி முருகன்.பி - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் -62875
4. டாக்டர்.எஸ்.சுதாகர் - மக்கள் நீதி மய்யம் - 38784
5. மன்சூர் அலி கான் - நாம் தமிழர் கட்சி - 54957
6. ஜோதிமுத்து.கே - பாட்டாளி மக்கள் கட்சி -207551
7. சுரேஷ்.கே - உழைப்பாளி மக்கள் கட்சி - 2198
8. அருண்குமார் - சுயேட்சை - 1797
9. அம்புரோஸ்.டி - சுயேட்சை - 1315
10. ஆனந்தராஜ்.டி - சுயேட்சை - 3022
11. இருதயசாமி.ஜி - சுயேட்சை - 1059
12. ஈஸ்வரன்.ஆர் - சுயேட்சை - 2759
13. உதயகுமார்.ஏ - சுயேட்சை - 1175
14. சண்முக பிரபு.கே - சுயேட்சை - 849
15. தினேஷ்குமார்.எம் - சுயேட்சை - 1415
16. நாகராஜ்.எம் - சுயேட்சை - 3289
17. பாண்டி.எம் - சுயேட்சை - 3109
18. முருகேசன்.எஸ்.பி. - சுயேட்சை - 1515
19. வெற்றிவேல்.என் - சுயேட்சை - 3903
20. வேம்பரசன்.வி - சுயேட்சை - 1124
21. வேலுசாமி.பி - சுயேட்சை - 849
22. எவரும் இல்லை - 14051
எழில் கொஞ்சும் மலைகளை 3 திசைகளிலும் அரணாக பெற்றது, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி. விவசாயம் முக்கிய தொழிலாக திகழ்வதால் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் நிறைந்த தொகுதியாகும். குளுகுளு கொடைக்கானல், ஆன்மிக தலமான பழனி முருகன் கோவில் ஆகியவற்றை கொண்டது திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி 1951-ல் உதயம் ஆனது. இதில் திண்டுக்கல், ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், நிலக்கோட்டை (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை திண்டுக்கல் தொகுதியின் வரலாறு சுவாரசியம் மிகுந்ததாகவே
கடந்த 1951-ம் ஆண்டு முதலே நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 1951, 1957, 1962 ஆகிய 3 தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களே வெற்றிவாகை சூடினர். திண்டுக்கல் தொகுதியின் முதல் எம்.பி. என்ற சிறப்பை அம்முசுவாமிநாதன் பெற்றார்.
திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. 1962-ம் ஆண்டில் முதல் முறையாக போட்டியிட்டது. அந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி கிடைக்கவில்லை. எனினும், 1967-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் களம் இறங்கியது. அதில் தி.மு.க.வின் அன்புசெழியன் வெற்றிபெற்றார்.
இதற்கு அடுத்து 1971-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. வெற்றியை தனதாக்கியது. தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராஜாங்கம், திண்டுக்கல் எம்.பி. ஆனார். அடுத்தடுத்து 2 வெற்றியால் திண்டுக்கல்லில் தி.மு.க. பலமாக காலூன்ற தொடங்கியது. இந்த நிலையில் தி.மு.க.வின் எம்.பி. ராஜாங்கம் 1972-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.
இதையடுத்து திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க. நம்பிக்கையுடன் களத்தில் குதித்தது. அதேநேரம் அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆரும் இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்தார். இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றிபெற்றார். இந்த முதல் வெற்றி அ.தி.மு.க.வுக்கு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் 1977-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வும், 1980-ல் நடந்த தேர்தலில் தி.மு.க.வும் மாறிமாறி வெற்றியை பெற்றன. ஆனால், 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களிலும் அ.தி.மு.க. அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெற்று அசத்தியது. மேலும் 1996-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.
இதைத் தொடர்ந்து 1998, 1999-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திண்டுக்கல் சி.சீனிவாசன் வெற்றிபெற்றார். இதையடுத்து 2004, 2009-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் என்.எஸ்.வி.சித்தன் தொடர்ந்து வென்றார்.
கடைசியாக 2014-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால், அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட உதயகுமார் வெற்றிபெற்று எம்.பி. ஆனார். இதனால் திண்டுக்கல் தொகுதி, மீண்டும் அ.தி.மு.க. வசம் வந்தது. அந்த தேர்தலில் எம். உதயகுமார் 5,10,462 வாக்குகளும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் 3,82,617 வாக்குகளும், தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி 93,794 வாக்குகளும் பெற்றனர். அதேநேரம் தே.மு.தி.க., காங்கிரஸ், மா.கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்கள் உள்பட 16 பேர் டெபாசிட் இழந்தனர்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை நீண்ட கால கோரிக்கைகள் பல நிறைவேற்றப்படாமல் உள்ளன. திண்டுக்கல்-குமுளி ரெயில் பாதை திட்டம், பழனி-ஈரோடு ரெயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு பகல் மற்றும் இரவு நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க வேண்டும்.
புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு, இரும்பு பெட்டி தொழில்களுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். இதுதவிர திண்டுக்கல்லில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று 8 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அது அறிவிப்போடு நின்று போனது. இதனால் உயர்தர சிகிச்சைக்கு இன்றும் மதுரைக்கு செல்லும் நிலை உள்ளது. மேலும் ஆன்மிக தலமான பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு ரோப்கார் அமைக்க வேண்டும்.
பழனி சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம், சூரியகாந்தி, கொய்யா, மாம்பழ சாகுபடியை மேம்படுத்த அதுதொடர்பான தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். திண்டுக்கல், நிலக்கோட்டையில் பூ விவசாயிகள் பயன்பெற வாசனை திரவிய தொழிற்சாலை, தென்னை நார் மற்றும் கயிறு தொழிற்சாலைகள் அமைத்தல் போன்ற பல கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.
அதேபோல் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த குளங்கள், அணைகளை தூர்வார வேண்டும். அனைத்து குளங்களுக்கும் மழைநீர் செல்வதற்கு கால்வாய்களை தூர்வாரி இணைக்க வேண்டும். மழைக்காலத்தில் காவிரி ஆற்றில் வீணாக செல்லும் தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் பாசனத்துக்காக திண்டுக்கல் மாவட்டத்துக்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்பட பல திட்டங்கள் வெறும் கனவாகவே மாறி விட்டதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய 4 தொகுதிகளில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இருந்தது. அதில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ.வாக இருந்த தங்கத்துரை, டி.டி.வி.தினகரன் பக்கம் சென்றார். பின்னர் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் நாடாளுமன்ற தேர்தலோடு, நிலக்கோட்டை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தொகுதிகளின் வெற்றியை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வின் கையே ஓங்கி இருக்கிறது. ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூர் ஆகிய தொகுதிகளில் நல்ல வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வென்றது.
அதேநேரம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது. மேலும் தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளன. எனவே, அ.தி.மு.க. கூட்டணிக்கும் பலம் கூடி இருக்கிறது. இதனால் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிக்கனியை பறிக்க கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகம் இல்லை.
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 15,18,385 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,43,516, பெண் வாக்காளர்கள் 7,74,717, மூன்றாம் பாலினத்தினர் 152.
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
திண்டுக்கல்...................................2,58,143
ஆத்தூர்..........................................2,75,091
ஒட்டன்சத்திரம்..............................2,27,754
பழனி ........................................... 2,65,485
நிலக்கோட்டை (தனி)......................2,25,716
நத்தம் ............................................2,66,196
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.உதயகுமார் வெற்றிபெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-
எம்.உதயகுமார் (அ.தி.மு.க.)- 5,10,462
எஸ்.காந்திராஜன் (தி.மு.க.)- 3,82,617
ஏ.கிருஷ்ணமூர்த்தி (தே.மு.தி.க.)- 93,794
என்.எஸ்.வி.சித்தன் (காங்கிரஸ்)- 35,632
என்.பாண்டி (மா.கம்யூனிஸ்டு)- 19,455
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்று இருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளின் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டுகள் விவரம் வருமாறு:-
திண்டுக்கல் சி.சீனிவாசன் (அ.தி.மு.க.).............91,413
எம்.பசீர்அகமது (தி.மு.க.)................................. 70,694
என்.பாண்டி (மா.கம்யூனிஸ்டு).............................8,657
டி.எ.திருமலைபாலாஜி (பா.ஜனதா)...................... 5,079
ஆத்தூர் (தி.மு.க. வெற்றி)
இ.பெரியசாமி (தி.மு.க.).............................. 1,21,738
நத்தம் விசுவநாதன் (அ.தி.மு.க.)........................... 94,591
எம்.பாக்கியசெல்வராஜ் (தே.மு.தி.க.)........................3,741
எஸ்.பி.இளஞ்செழியன் (பா.ஜனதா)...........................1,365
ஒட்டன்சத்திரம் (தி.மு.க. வெற்றி)
அர.சக்கரபாணி (தி.மு.க.)........................ 1,21,715
கே.கிட்டுசாமி (அ.தி.மு.க.).................................55,988
சந்தானம் (இ.கம்யூனிஸ்டு)............................ 3,684
எஸ்.கே.பழனிசாமி (பா.ஜனதா)........................1,909
பழனி (தி.மு.க. வெற்றி)
இ.பெ.செந்தில்குமார் (தி.மு.க.).............................1,00,045
பி.குமாரசாமி (அ.தி.மு.க.)..................................... 74,459
ராஜமாணிக்கம் (மா.கம்யூனிஸ்டு)........................... 9,687
கனகராஜ் (பா.ஜனதா)............................................. 4,092
நிலக்கோட்டை (தனி) (அ.தி.மு.க. வெற்றி)
ஆர்.தங்கத்துரை (அ.தி.மு.க.)............................85,507
எம்.அன்பழகன் (தி.மு.க.)...................................70,731
கே.ராமசாமி (தே.மு.தி.க.)....................................7,666
ஆர்.அழகுமணி (பா.ஜனதா)............................... 2,565
நத்தம் (தி.மு.க. வெற்றி)
எம்.ஏ.ஆண்டி அம்பலம் (தி.மு.க.)...................... 93,822
எஸ்.ஷாஜகான் (அ.தி.மு.க.)...............................91,712
ஜி.கார்த்திகேயன் (தே.மு.தி.க.)...........................9,373
வி.சிவசங்கரன் ( நாம்தமிழர் கட்சி)....................2,393