வாக்காளர்கள் | : | | 1494929 |
ஆண் | : | | 731263 |
பெண் | : | | 763587 |
திருநங்கை | : | | 79 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாரு;
1. ஏ.கே.மூர்த்தி - பாட்டாளி மக்கள் கட்சி-343234
2. எஸ்.ஜெகத்ரட்சகன் - திராவிட முன்னேற்ற கழகம்-672190-வெற்றி
3. என்.ஜி.பார்த்திபன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-66826
4. ந.ராஜேந்திரன் - மக்கள் நீதி மய்யம்-23771
5. யு.ரா.பாவேந்தன் - நாம்தமிழர் கட்சி -29347
6. டி.தாஸ் - பகுஜன் சமாஜ் கட்சி -8307
7. மு.சவிதா - அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா -4498
8. ஆர்.இளம் வழுதி - சுயேச்சை - 862
9. பஞ்சுஉதயகுமார் - சுயேச்சை - 839
10. பி.கணேசன் - சுயேச்சை - 925
11. எம்.எஸ்.கிருஷ்ணன் - சுயேச்சை -1322
12. டாக்டர் டி.எம்.எஸ்.சாதுமுத்து கிருஷ்ணன் ராஜேந்திரன்- சுயேச்சை - 1186
13. பே.சி.சுரேஷ் - சுயேச்சை-1062
14. சு.சேட்டு - சுயேச்சை-1067
15. எம்.நடராஜன் - சுயேச்சை -1214
16. மு.பார்த்திபன் - சுயேச்சை-3313
17. கோ.மூர்த்தி - சுயேச்சை-1616
18. ச.மூர்த்தி - சுயேச்சை-3499
19. ஆர்.ரமேஷ் - சுயேச்சை-803
20. நோட்டா-12179
வாக்காளர்கள் எவ்வளவு?
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 14,79,961 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,24,688, பெண் வாக்காளர்கள் 7,55,199, மூன்றாம் பாலினத்தினர் 74 பேர் உள்ளனர்.
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
அரக்கோணம் (தனி) 2,13,956
சோளிங்கர் 2,59,869
காட்பாடி 2,34,328
ராணிப்பேட்டை 2,51,533
ஆற்காடு 2,47,449
சென்னைக்கு மிக அருகில் உள்ளது அரக்கோணம். இங்கு ஏழைகள், நடுத்தர மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்திற்கும் சென்னைக்கு சென்று வருகின்றனர். அரக்கோணத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.ராஜாளி, மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம், தேசிய பேரிடர் மீட்பு படை பயிற்சி மையம், 8 பிளாட்பாரங்கள் கொண்ட பழமை வாய்ந்த ரெயில் நிலையம் உள்ளது.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது இந்த தொகுதியில் அரக்கோணம் (தனி), பள்ளிப்பட்டு, சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யாறு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்று இருந்தது.
2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அரக்கோணம் (தனி), திருத்தணி, காட்பாடி, சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றது.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது காங்கிரஸ் கோட்டையாகவே இருந்து வந்து உள்ளது. காங்கிரஸ் கட்சி 5 முறை, அ.தி.மு.க. 2 முறை, தி.மு.க. 2 முறை, பா.ம.க., த.மா.கா. தலா ஒரு முறை வெற்றி பெற்று உள்ளன. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒ.வி.அழகேசன், 1980-ம் ஆண்டு ஏ.எம்.வேலு, 1984, 1989, 1991&ம் ஆண்டுகளில் ஆர்.ஜீவரத்தினம் ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏ.எம்.வேலு த.மா.கா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1998-ம் ஆண்டு சி.கோபால் அ.தி.மு.க சார்பிலும், 1999, 2009&ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ஜெகத்ரட்சகனும், 2004-ம் ஆண்டு பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.வேலுவும் வெற்றி பெற்றனர்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருத்தணி கோ.அரி 4,93,534 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ 2,52,768 வாக்குகள் பெற்றார். பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.வேலு 2,33,762 வாக்குகள் பெற்றார்.
தொடரும் பிரச்சினைகள்
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிசை தொழிலாக நெசவுத்தொழிலை செய்து வருகின்றனர். நெமிலி, பனப்பாக்கம், மின்னல், குருவராஜபேட்டை பகுதியில் கைத்தறி பூங்கா ஏற்படுத்தி தர வேண்டும் என்பது நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
அரக்கோணத்தில் ரெயில்வே சார்ந்த படிப்புகளுக்கான மையத்தை ஏற்படுத்தவும், அரக்கோணத்தில் மூடப்பட்ட இரும்பு தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ராணிப்பேட்டையில் தோல், ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்தடி நீராதாரத்தை பாழாக்கி வருவதை தடுக்க வேண்டும். காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.
பாலாறு, பொன்னையாறு, கொசஸ்தலை, கல்லாறு ஆகிய ஆறுகள் அரக்கோணம் தொகுதியை கடந்து செல்கின்றன. இந்த ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. அரக்கோணம் ரெயில் நிலையத்தை அதிநவீன வசதிகள் கொண்ட ரெயில் நிலையமாக மாற்ற வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள். முக்கியமான பாலங்களுக்கு தேவைப்படும் கர்டர்கள், உதிரி பாகங்கள் அரக்கோணம் ரெயில்வே பணிமனையில் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பணிமனையின் தரத்தை உயர்த்தி வேலைவாய்ப்பை பெருக்கவேண்டும் என்பதும் கோரிக்கையாக இருக்கிறது.
தத்தெடுத்த கிராமங்கள்
அரக்கோணம் தொகுதி எம்.பி. கோ.அரி கடந்த 5 ஆண்டுகளில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டலம் ஊராட்சி, சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட கொடைக்கல் ஊராட்சி, திருத்தணி தொகுதியில் பாண்டரவேடு ஊராட்சி ஆகிய பகுதிகளை தத்தெடுத்து இருந்தார். இதில் தண்டலம் ஊராட்சியில் மட்டும் சில அடிப்படை வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மற்ற ஊராட்சிகளை தத்தெடுத்ததோடு சரி வேறு எந்த பணியும் நடக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கோ.அரி எம்.பி. கூறியதாவது:-
இதுவரை அரக்கோணம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் கேள்விகளை கேட்டவன் என்ற பெருமை எனக்கு கிடைத்து உள்ளது.
5 வருடத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 கோடியில், 21 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பில் தொகுதிக்கு தேவையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி அரசு மருத்துவமனைகளுக்கு கட்டிடங்கள், ரேஷன் கடைகள், அங்கன்வாடிகள், பள்ளி, நூலகங்களுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.
தொகுதி மேம்பாட்டு நிதியில் 84.62 சதவீதம் பணத்தை வளர்ச்சி பணிகளுக்கு செலவு செய்து உள்ளேன். இது மட்டுமில்லாமல் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சோளிங்கர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும், சேலத்தில் இருந்து காட்பாடி வரை வந்த மின்சார ரெயிலை அரக்கோணம் வரை நீட்டிப்பு செய்யவும் நடவடிக்கை எடுத்து உள்ளேன்.
மேலும் நகரியில் இருந்து விழுப்புரம் செல்லும் புதிய ரெயில் வழித்தடத்தை விரைந்து முடிக்க கூடுதல் நிதி பெற்று கொடுத்து உள்ளேன். தத்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் என்ன பணிகள் செய்ய முடியுமோ அதை சரியாக செய்து உள்ளேன்.
மேலும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இருதயம், நுரையீரல், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியை அதிக அளவிலான பயனாளிகளுக்கு பெற்று கொடுத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:
அரக்கோணம் (தனி) (அ.தி.மு.க வெற்றி)
சு.ரவி (அ.தி.மு.க.) 68,176
என்.ராஜ்குமார் (தி.மு.க.) 64,015
அற்புதம் (பா.ம.க.) 20,130
ஜி.கோபிநாத் (விடுதலை சிறுத்தைகள்) 5,213
திருத்தணி (அ.தி.மு.க. வெற்றி)
பி.எம்.நரசிம்மன் (அ.தி.மு.க.) 93,045
ஏ.ஜி.சிதம்பரம் (காங்கிரஸ்) 69,904
ஏ.வைத்திலிங்கம் (பா.ம.க.) 29,596
டி.கிருஷ்ணமூர்த்தி (தே.மு.தி.க.) 15,648
ராணிப்பேட்டை (தி.மு.க. வெற்றி)ஆர்.காந்தி (தி.மு.க.) 81,724
சி.ஏழுமலை (அ.தி.மு.க.) 73,828
எம்.கே.முரளி (பா.ம.க.) 23,850
எஸ்.நித்தியானந்தம் (தே.மு.தி.க.) 5,906
ஆற்காடு (தி.மு.க.வெற்றி)ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (தி.மு.க.) 84,182
கே.வி.ராமதாஸ் (அ.தி.மு.க.) 73,091
ஜி.கரிகாலன் (பா.ம.க.) 35,043
பி.என்.உதயகுமார் (ம.தி.மு.க.) ............. 5,387
காட்பாடி (தி.மு.க. வெற்றி)
துரைமுருகன் (தி.மு.க.) 90,534
எஸ்.ஆர்.கே.அப்பு (அ.தி.மு.க.) 66,588
என்.டி.சண்முகம் (பா.ம.க.) 12,728
டி.வி.சிவானந்தம் (த.மா.கா.) 2,163
சோளிங்கர் (அ.தி.மு.க. வெற்றி)
என்.ஜி.பார்த்திபன் (அ.தி.மு.க.) 77,651
ஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ்) 67,919
கே.சரவணன் (பா.ம.க.) 50,827
பி.ஆர்.மனோகர் (தே.மு.தி.க.) 6,167
வெற்றி யார் கையில்?
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டு முதல் 5 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களே தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர். தற்போது அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் என மாறி மாறி வெற்றி பெற்று வருகிறது. இந்த தொகுதியில் இவர்தான் வெற்றி பெறுவார் என்று உறுதியாக சொல்லி விட முடியாத நிலை இருந்து வருகிறது.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கோணம் (தனி), திருத்தணி, சோளிங்கர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க.வும், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்று உள்ளது.
சோளிங்கர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.ஜி.பார்த்திபன் டி.டி.வி.தினகரன் அணிக்கு மாறியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் சோளிங்கர் தொகுதி காலியாக இருக்கிறது. இந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சமபலத்துடன் உள்ளன. கோ.அரி எம்.பி. தொகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுவருகிறார் என்றும், சில திட்டங்களை கொண்டுவந்துள்ளார் என்றும் தொகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் வெற்றி நடு நிலையாளர்களின் கையில்தான் உள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அரக்கோணம் தொகுதியில் 14,75,934 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் படி இந்த தேர்தலில் 14,79,961 வாக்காளர்கள் உள்ளனர்.
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோ.அரி வெற்றி பெற்றார். முதல் 7 இடங்களை பிடித்தவர்களின் விவரம் வருமாறு,
கோ.அரி (அ.தி.மு.க.) 4,93,534
என்.ஆர்.இளங்கோ (தி.மு.க.) 2,52,768
ரா.வேலு (பா.ம.க.) 2,33,762
நாசே ஆர்.ராஜேஷ் (காங்கிரஸ்) 56,337
டி.தாஸ் (பகுஜன் சமாஜ்) 7,354
எஸ்.ராஜேஷ் (ஆம் ஆத்மி) 4,021
நோட்டா 10,370
திருத்தணி 2,72,826