கட்சி: புதிய நீதி கட்சி
புதிய நீதிக் கட்சி (ஆங்கிலம்: New Justice Party) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் உறுப்பினரான ஏ.சி. சண்முகம் என்பவரால் இக்கட்சி தொடங்கப்பட்டது. ஏ.சி. சண்முகம் என்பவர் நீதிக் கட்சி என்ற அரசியல் கட்சியை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001க்கு முன் தொடங்கினார். பின்னர் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு இவர் நீதிக் கட்சி என்பதை புதிய நீதிக் கட்சி என பெயர்மாற்றம் செய்து இதன் தலைவராக பணியாற்றிவருகிறார். தமிழகத்தில் முதலியார் சமூக மக்களின் பிரதிநிதித்துவம் பெறவும், இட ஒதுக்கீடு பெறவும், இம்மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் புதிய நீதிக் கட்சி தொடங்கப்பட்டது.
போட்டி: 1
வெற்றி: 0
வேட்பாளர் பட்டியல்