கட்சி: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
இந்திய மாநிலமான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தில் செயல்படும் அரசியல் கட்சியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்). இது 1994 இல் வைகோவால் நிறுவப்பட்டது. தி.மு.க. கட்சியின் தலைவரான கருணாநிதி 1991 நவம்பர் 26-ம் தேதி கட்சியின் செயற்குழுவை கூட்டி வைகோவை கட்சியில் இருந்து நீக்க கருணாநிதி முடிவு செய்தார் அச்செயற்குழுவில் வைகோ மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி கருணாநிதி உரையாற்றினார். அவரின் அறிவுரையின்படி வேறு சிலரும் வைகோவைப் பற்றி அவதூறு பேசினார்கள், பின்னர் வைகோ தன்னிலை விளக்கம் அளித்தார். 1993-ம் ஆண்டு அக்டோபர் மாதம், வைகோவைக் கட்சியில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி. தி.மு.கழகத்தின் ஒன்பது மாவட்டச் செயலாளர்களும், 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், கருணாநிதியின் குடும்ப அரசியலைக் கண்டித்து, வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று வலியுறுத்தியதால், அவர்கள் அனைவரையுமே கட்சியில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி. கருணாநிதியால் வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளைக் காப்பதற்காக, ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994-ம் ஆண்டு மே மாதம் 6-ம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள ‘தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது. மேலும் கீழும் சிவப்பு வண்ணத்துடனும், நடுவில் கருப்பு வண்ணமும் கொண்டதாக கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. கழகத்தின் பொதுச்செயலாளராக வைகோ தேர்ந்து எடுக்கப்பட்டார். இணையதளம் : mdmk.org.in/
போட்டி: 1
வெற்றி: 1
வேட்பாளர் பட்டியல்