கட்சி: திராவிட முன்னேற்ற கழகம்
திராவிட இன மக்களின் உரிமைகளை, தன்மான உணர்வுகளை, தனித்தன்மையை, தன்னிகரற்ற சிறப்பினைப் பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், `மக்கள் குரலே மகேசன் குரல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், நாடு வாழ, நலிவுகள் தீரப் போராடவும், திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க.) 1949 செப்டம்பர் 17-இல் அறிஞர் அண்ணா என அழைக்கப்படும் டாக்டர் சி.என். அண்ணாதுரை தொடங்கினார். தி.மு.கழகத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கத்தின், மறுமலர்ச்சி இயக்கத்தின் வரலாறாகும். தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் பாதுகாத்து மேம்படுத்த ஓர் அரசியல் இயக்கம் நடத்திய பேராட்டங்களின் தொகுப்பாகும். தென்னக மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் துறைகளில் அவர்கள் அதிக இடம் பெறவும், அரசு பதவிகளிலும் இயக்கங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், சர்.பி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் 1916-இல் தொடங்கிய தென் இந்திய நல உரிமைச்சங்கம், திராவிட இயக்கத்தின் கருவாகும். இச்சங்கம் `ஜஸ்டிஸ் (நீதி)’ என்ற ஆங்கில பத்திரிக்கை நடத்தியதால், நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது. பிராமணர் அல்லாதாரின் சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாக்க நீதிக்கட்சி `திராவிடா, விழி, எழு, நட, உன் நாட்டை உனதாக்கு’ என்ற கொள்கையுடன் போராடியது. 1920, 1923, 1929 ஆண்டுகளில் பதவி வகித்திருந்த நீதிக்கட்சியின் ஆட்சியில் கீழ்க்கண்ட வரலாற்றுச் சாதனைகள் படைக்கப்பட்டன. 1949-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா தோழர்கள் அனைவரையும் ‘தம்பி’ என்று பாசத்துடன் அழைத்து, அன்புகாட்டி அரவணைத்து உலகில் வேறு எந்த அரசியல் இயக்கத்திலும் காணமுடியாத குடும்பப் பாச உணர்வுடன் கட்சியைக் கட்டி வளர்த்தார். 18 ஆண்டுகள் அயராத உழைப்பில் காங்கிரசை வீழ்த்தி, 1967-ம் ஆண்டு கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்தினார். இந்த மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார். ஆனால் புற்றுநோய்த் தாக்குதலால் உடல்நலம் குன்றி இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாக 1969 பிப்ரவரி 3-ம் நாள் இயற்கை எய்தினார். இணையதளம் : dmk.in
போட்டி: 21
வெற்றி: 21
வேட்பாளர் பட்டியல்