கட்சி: ஆம் ஆத்மி கட்சி
ஆம் ஆத்மி கட்சி Ām ātmi kaṭci (AAP, ஆங்கிலம்: Common Man's Party) ஒரு இந்திய அரசியல் கட்சியாகும்,ஆம் ஆத்மி கட்சி என்பது ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். இது, சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவாலால் 26 நவம்பர் 2012ல் தில்லியில் தொடங்கப்பட்டது. ஜன் லோக்பால் மசோதாவைக் கோரி 2011-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் இயக்கத்தை அரசியலாக்க வேண்டும் என்ற சிந்தனையில் இந்த கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கினார். இந்தக் கட்சி உருவாகியது முதல், ஊழலுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது. டெல்லியில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தின் விலை ஏற்றத்திற்கு காரணம் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கழகங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தியது. கற்பழிப்பிற்கு எதிரான கடுமையான சட்டத்தை அறிமுகப்படுத்தக் கோரி, கற்பழிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது. 2013 தில்லி சட்ட பேரவை தேர்தலில் அறிமுகமான இந்தக் கட்சி தில்லியில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2013 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் படி இக்கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 28 இடங்களை வென்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சி அங்கீகாரம் அளித்துள்ளது. அதாவது, இந்திய தேர்தலில் குறைந்தது மூன்று சதவிகித இடங்களை கைப்பற்றும் அல்லது மொத்த வாக்குகளில் குறைந்தது 6 சதவிகித வாக்குகளைப் பெறும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும். அதன்படி தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைக் கைப்பற்றியுள்ளதால், அக்கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேலும், தேர்தலில் போட்டியிட பயன்படுத்திய துடைப்பம் சின்னத்தையே, கட்சி சின்னமாக அங்கீகரித்தது. 2014 மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் நான்கு இடங்களில் வென்றதால் அங்கும் இக்கட்சிக்கு மாநில கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தில்லியின் 67 தொகுதிகளில் இக்கட்சி வெற்றி பெற்றது. மீதி மூன்று இடங்களை பாசக பெற்றது. www.aamaadmiparty.org
போட்டி: 32
வெற்றி: 1