மணிப்பூரில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி பதவியை துறந்தனர் பா.ஜனதாவில் இணைய முடிவா?
மணிப்பூரில் பிரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
பதிவு: மே 31, 2019 00:00 AM மாற்றம்: மே 31, 2019 04:08 AM
இம்பால்,

நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், மணிப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர், தங்களது கட்சி பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் கெய்காங்கத்திடம் தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். ராஜினாமாவை ஏற்பது பற்றி ராகுல் காந்தி முடிவு எடுப்பார் என்று கெய்காங்கம் தெரிவித்தார்.

12 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவில் இணைவார்கள் என்று கருதப்பட்டது. ஆனால், கட்சியை விட்டு விலகும் எண்ணம் இல்லை என்றும், கட்சியை அடிமட்டத்தில் பலப்படுத்தவே கட்சி பதவியை விட்டு விலகி உள்ளோம் என்றும் அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
ராகுல் காந்தியுடன் குமாரசாமி சந்திப்பு கர்நாடக கூட்டணி அரசு சுமுகமாக நடைபெறும் என அறிவிப்பு
கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். கர்நாடக கூட்டணி அரசு சுமுகமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு: மே 31, 2019 00:00 AM மாற்றம்: மே 31, 2019 03:25 AM
புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் ஜனதா தளம் (எஸ்), காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. மாநில அரசுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதால் மாநில அரசு தொடர்ந்து நெருக்கடியில் இருந்து வருகிறது.

சமீபத்தில் அதிருப்தியில் உள்ள 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிஹோலி, சுதாகர் ஆகியோர் பா.ஜனதா தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் இது அரசியல்ரீதியான சந்திப்பு அல்ல என்று தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது சோனியா காந்தியும் அங்கு இருந்தார். அப்போது குமாரசாமி கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ராகுல் காந்தியிடம் விளக்கினார்.

இந்த சந்திப்பு குறித்து ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில், “கர்நாடக முதல்-மந்திரி மாநில அரசியல் சூழ்நிலை குறித்து ராகுல் காந்தியிடம் விளக்கினார். இரு கட்சிகளின் ஒத்துழைப்புடனும், நல்லுறவுடனும் மாநில அரசு சுமுகமாக நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என்றும், அவரது சேவை நாட்டுக்கு தேவை என்றும் குமாரசாமி வலியுறுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அமைச்சராக பதவியேற்பு
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
பதிவு: மே 30, 2019 00:00 AM மாற்றம்: மே 30, 2019 19:45 PM


நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை தனதாக்கி மீண்டும் ஆட்சியை தொடர்கிறது. மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகிய போது இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அமைச்சரவையில் இடம்பெறுகிறார் என தகவல்  வெளியாகியது.

புதிய அமைச்சரவையில் இடம்பெறுமாறு பிரதமர் மோடி அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும், பேசியதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றிய போது சிறப்பாக செயல்பட்டவர் ஜெய்சங்கர். பிரதமர் மோடியிடம் நன்மதிப்பை பெற்றவர்களில் ஜெய்சங்கரும் ஒருவராவார். அவருக்கு முன்னதாக சுஜாதா சிங், ஆகஸ்ட் 2013-ல் வெளியுறவுத்துறை செயலாளராக பதவி ஏற்ற போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், அப்பதவியில் ஜெய்சங்கரை நியமிக்க விரும்பிய தாகக் கூறப்பட்டது. மோடி அரசு 2015-ல் சுஜாதா சிங்கிற்கு 7 மாதங்கள் பதவிக்காலம் இருந்த நிலையில் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். இதனையடுத்து ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளர் ஆனார். 

சீனாவுடனான பிரச்சனையை தீர்ப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றியவர். மோடி பிரதமராகி அமெரிக்கா சென்ற போது இந்திய தூதரக அதிகாரியாக இருந்த ஜெய்சங்கர் அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தார். இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் திறமையாக செயல்பட்டு அமெரிக்கா உடனான பிரச்சனையை சமாளித்ததுடன் மோடியையும் ஜெய்சங்கர் கவர்ந்தார். இதனையடுத்தே வெளியுறவுத்துறை செய்லாளர் ஆனார். இப்போது அவருடைய பதவிகாலம் முடிந்த பின்னர் அமைச்சரவைக்கு பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். 
மேலும் செய்திகள்