தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் நியமனம் பற்றி அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை
தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் நியமனம் பற்றி அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
பதிவு: மே 25, 2019 00:00 AM மாற்றம்: மே 25, 2019 17:27 PM
சென்னை,

தமிழகத்தில் வேலூர் தவிர 38 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது.  இந்த தேர்தலில் தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் (விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியை தவிர), அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் பொறுப்புகளில் யார் யாரை நியமிப்பது என்பது பற்றி அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இதற்காக டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், ராசா உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகள்
கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பதிவு: மே 25, 2019 00:00 AM மாற்றம்: மே 25, 2019 17:03 PM
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. நாடு முழுவதும் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே அக்கட்சியானது வென்றது. அமேதி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி தோற்றுப்போனது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராகுல் காந்தி கடிதம் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.  ஆனால், இதில் உண்மையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஒட்டுமொத்த காங்கிரஸ் செயற்குழுவும் நிராகரித்தது.  இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ராகுல் காந்திக்கு வழங்கி கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.  கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது என கூறினார்.

முன்னாள் ராணுவ மந்திரியான ஏ.கே. அந்தோணி கூறும்பொழுது, எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற முடியவில்லையே தவிர பெரும் சரிவல்ல. முழுமையாக ஆய்வு செய்த பின்னரே விரிவாக விவாதிப்போம்.  ராகுல் காந்தி இனி என்ன செய்வார் என்பதை நான் எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும்பொழுது, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி.  கடுமையாக உழைத்த கட்சி தலைவர் ராகுலுக்கும் நன்றி.  தோல்விக்கு பொறுப்பேற்க ராகுல் காந்தி தயாராக இருந்தார்.  ஆனால் தோல்விக்கான பொறுப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ராகுல் காந்தி சிறந்த தலைவர் என்றும், தேர்தல் முடிவுக்கு பின்னர் ஒருமித்த கருத்துடன் பிரதமரை தேர்வு செய்வோம் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
ராணுவம் நாட்டுக்கு சொந்தமானது, தனி ஒருவருக்கு சொந்தமானது இல்லை என்று ராகுல்காந்தி விமர்சித்தார். #RahulGandhi
காவலாளி ஒரு திருடன் என கோஷம் எழுப்புங்கள் என தொடர்ந்து கூட்டத்தினரிடம் கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #RahulGandhi
ராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராகுல் காந்தி கட்சி தலைவராக நீடிப்பார்; காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பதிவு: மே 25, 2019 00:00 AM மாற்றம்: மே 25, 2019 15:48 PM
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. நாடு முழுவதும் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வென்றது. அமேதி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோற்றுப்போனது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்தலில் பெற்ற படுதோல்விக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்த மிகப்பெரிய தோல்வி, மக்களிடையே எந்த விஷயங்களை சரியாக கொண்டு சேர்க்கவில்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராகுல் காந்தி கடிதம் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.  ஆனால், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம் அளித்துள்ளார்.  இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ராகுல் காந்தி சிறந்த தலைவர் என்றும், தேர்தல் முடிவுக்கு பின்னர் ஒருமித்த கருத்துடன் பிரதமரை தேர்வு செய்வோம் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
ராணுவம் நாட்டுக்கு சொந்தமானது, தனி ஒருவருக்கு சொந்தமானது இல்லை என்று ராகுல்காந்தி விமர்சித்தார். #RahulGandhi
காவலாளி ஒரு திருடன் என கோஷம் எழுப்புங்கள் என தொடர்ந்து கூட்டத்தினரிடம் கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #RahulGandhi
ராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.