நாட்டிலேயே அதிக அளவாக பீகாரில் 8.17 லட்சம் ‘நோட்டா’ வாக்குகள் பதிவு
நாட்டிலேயே அதிக அளவாக பீகாரில் 8.17 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவாகி உள்ளது.
பதிவு: மே 25, 2019 00:00 AM மாற்றம்: மே 25, 2019 02:10 AM
புதுடெல்லி,

ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் வாக்காளர்களுக்காக, கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முதல் நோட்டா வாக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்களில் தனி பட்டன்களும் அடங்கி இருக்கின்றன. இந்த வாக்குகள் சில நேரங்களில் முக்கிய வேட்பாளர்களின் வெற்றியையும் பாதிக்கின்றன.

இந்தநிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை நிலவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் நாட்டிலேயே அதிகபட்சமாக பீகாரில் 8.17 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து இருக்கின்றனர். இது மாநிலத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 2 சதவீதம் ஆகும்.

இதற்கு அடுத்ததாக டையூ மற்றும் டாமனில் 1.7 சதவீதம், ஆந்திராவில் 1.49 சதவீதம், சத்தீஷ்காரில் 1.44 சதவீதத்தினரும் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளனர்.

தனிப்பட்ட தொகுதியை பொறுத்தவரை பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் 51,660 வாக்காளர்கள் நோட்டாவை தேர்ந்தெடுத்து உள்ளனர். நாட்டிலேயே மிகவும் அதிக அளவான இது, தொகுதியில் பதிவான வாக்குகளில் 5.04 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
பீகார் மாநிலம் முசாபர்பூரில் ஒரு ஓட்டலில் இருந்து மின்னணு வாக்கு இயந்திரங்களும், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பா.ஜனதா 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பதிவு: மே 24, 2019 00:00 AM மாற்றம்: மே 24, 2019 22:57 PM
புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இந்நிலையில் பா.ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 303 இடங்களை பெற்றுள்ளது. காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வென்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மாநில கட்சியான தி.மு.க., 23 இடங்களில் வென்று தேசிய அளவில் 3-ம் இடத்தைபிடித்துள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மோடியின் அலையை மேற்கு வங்காளத்தில் தடுக்க தவறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் சிந்த்வாரா தொகுதியில் வெற்றி பெற்றார்.
நீலகிரி மக்களவை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா வெற்றி பெற்றுள்ளார்.
பா.ஜனதாவிற்கு போட்டியாக காங்கிரஸ் வேட்பாளர் பேரணியில் காவி கொடி ஏந்தப்பட்டு, ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்கப்பட்டது.
காங்கிரஸ் மடியாது, நாட்டிற்கு அவசியமானது - அசோக் கெலாட்
காங்கிரஸ் மடியாது, நாட்டிற்கு அவசியமானது என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
பதிவு: மே 24, 2019 00:00 AM மாற்றம்: மே 24, 2019 21:42 PM
2019 தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது. காங்கிரஸ் மீண்டும் படுதோல்வியை தழுவியது. பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறினார். அதனைதான் செய்து வருகின்றேன் என அவ்வப்போது கூறுவார். இப்போது அதுபோன்ற நிலையைதான் காங்கிரசும் எதிர்க்கொள்கிறது. இத்தேர்தலில் 52 தொகுதிகளில் வென்றுள்ளது. வடமாநிலங்களில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பு மிகவும் உயர்வானது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து 70 ஆண்டுகளிலும் காங்கிரஸ் அதை காப்பாற்றியது, மேலும் அது மனத்தாழ்மையை ஏற்றுக்கொண்டது. இந்த தேர்தலில் பிரச்சாரம் பிரச்சினைகளின் அடிப்படையில் நடக்கவில்லை, விவசாயிகள் பிரச்சினை, ஏழை மக்களின் பிரச்சினை, கிராமங்களில் உள்ள பிரச்சினை, தலித்களுக்கு உள்ள பிரச்சினை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்பதுபற்றி நடக்கவில்லை. 

பா.ஜனதா மக்களின் உணர்ச்சிகளைக் கொண்டு பிரசாரம் மேற்கொண்டது, உண்மையான பிரச்சனையை பேசவில்லை. மத, சாதி, தேசியவாதம் மற்றும் ராணுவம் ஆகியவற்றில் மட்டுமே பா.ஜனதா அரசியலை நடத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சினைகளின் அடிப்படையில் பிரசாரம் மேற்கொண்டார். பா.ஜனதா தன்னுடைய சாதனையை பேசி வாக்கு கேக்கவில்லை. பொய்யை பேசி மக்களை ஆட்டிப்படைத்துள்ளது. அவர்களும் வாக்களித்துள்ளனர் எனக் கூறியுள்ளார். 

காங்கிரஸ் மடியாது, நாட்டிற்கு அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதாவை தோற்கடித்து 5 மாதங்களுக்கு முன்னதாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இப்போது 25 தொகுதிகளும் அங்கு பா.ஜனதா வசம் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்