பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பதிவு: மே 23, 2019 20:11 PM மாற்றம்: மே 23, 2019 20:11 PM
புதுடெல்லி,

நாட்டில் 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.  பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் முன்னிலையில் உள்ளது.

பிரதமர் மோடிக்கு, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  அவர், பிரதமர் மோடி, ஜனநாயக கொள்கைகளை அடிப்படையாக கொண்ட ஒரு முற்போக்கான அரசாங்கத்தை வழங்குவார் என நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம், தமிழக பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் பிரதமர் மோடிக்கு டுவிட்டர் வழியே வாழ்த்து தெரிவித்துள்ளார்.  எனினும், தோற்றவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் அல்ல என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்