பிரதமர் மோடி பெயருக்கு முன்னால் ‘காவலாளி’யை நீக்கினார்
பிரதமர் மோடி டுவிட்டரில் ‘காவலாளி’ என்ற அடைப்பெயரை நீக்கினார்.
பதிவு: மே 23, 2019 18:38 PM மாற்றம்: மே 23, 2019 18:38 PM
பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியதும், நான் காவல்காரன் என்ற பெயரில் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து டுவிட்டரில் தனது பெயரையும் சவ்கிதார் (காவலாளி) மோடி என மாற்றினார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதனையடுத்து பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களுடைய பெயரை டுவிட்டரில் அதுபோன்று காவலாளி என அடைபெயரை சேர்த்தனர்.

இப்போது தேர்தல் முடிந்ததும் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகியுள்ளது. தேர்தலில் பா.ஜனதா 340க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டரில் இருந்து காவலாளி என்ற அடைப்பெயரை நீக்கியுள்ளார். 
மேலும் செய்திகள்