தூத்துக்குடியில் தமிழிசை 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
தூத்துக்குடியில் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பதிவு: மே 23, 2019 16:11 PM மாற்றம்: மே 23, 2019 16:11 PM
தென் மாவட்டங்களில் முக்கியமான தொகுதியான தூத்துக்குடியில் திமுக  சார்பில் கனிமொழியும், பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தலைவர் தமிழிசையும் போட்டியிட்டனர். பிரசாரத்தின்போது அனல் பறந்த தொகுதிகளில் இதுவும் ஒன்று. இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.  கருத்துக்கணிப்பு முடிவில் கனிமொழி வென்றாலும், இருவருக்கும் இடையே கடும் போட்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் தமிழிசை மிகவும் பின்தங்கியுள்ளார்.

தூத்துக்குடியில் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 3,24,161 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் களமிறங்கிய தமிழிசை சவுந்தரராஜன் 1,14,401 வாக்குகளைப் பெற்றுள்ளார். கனிமொழி 57.43 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். தமிழிசை 20.17 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் செய்திகள்