உ.பி.யில் மகா கூட்டணி வியூகத்தை முறியடித்து பா.ஜனதா 60 தொகுதிகளில் முன்னிலை
உ.பி.யில் மகா கூட்டணி வியூகத்தை முறியடித்து பா.ஜனதா 60 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.
பதிவு: மே 23, 2019 14:22 PM மாற்றம்: மே 23, 2019 14:22 PM
2019 தேர்தலில் உ.பி.யில் பா.ஜனதாவின் வெற்றியை தடுக்கும் வகையில் மாநிலத்தில் மிகப்பெரிய கட்சிகளாக இருந்த சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்தது. காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டதால் காங்கிரஸ் தனியாக களமிறங்கியது. காங்கிரசும் பிரியங்காவை களத்தில் இறக்கியது. கடந்த முறை பா.ஜனதா கூட்டணி 71 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. இம்முறை 40 தொகுதிகள் வரையில் பா.ஜனதா வெற்றியை பெறலாம் என கருத்துக்கணிப்புக்கள் வெளியாகியது.

ஆனால் பா.ஜனதா மகா கூட்டணி வியூகத்தையும் முறியடித்து 60 தொகுதிகளில் முன்னிலையை பெற்றுள்ளது. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி 19 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி மட்டும் முன்னிலைப் பெற்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னடைவை சந்தித்துள்ளார். மாநிலத்தில் பா.ஜனதா மீண்டும் தன்னுடைய அலையை நிரூபிக்கிறது. காங்கிரஸ் பிரியங்காவை இறக்கி வாக்குகளை பிரித்ததும் இதற்கான காரணமாக இருக்கலாம் எனவும் பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம் என பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றியை தனதாக்கியுள்ளது.
தூத்துக்குடியில் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சபரிமலை விவகாரத்தை பெரிதும் எதிர்பார்த்த பா.ஜனதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
மேற்குவங்காள மாநிலத்தில் வன்முறை நடந்த தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனிடம் பா.ஜனதா மனு கொடுத்துள்ளது.