மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: தேர்தல் கருத்து கணிப்பு உறுதியானதல்ல என அறிவிப்பு
ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பதிவு: மே 21, 2019 04:45 AM மாற்றம்: மே 21, 2019 04:45 AM

கொல்கத்தா, 

 ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட பல தலைவர்களை ஏற்கனவே சந்தித்த அவர் நேற்று கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இருவரும் சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றி அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.

முன்னதாக அமராவதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ‘‘தேர்தல் கருத்து கணிப்புகள் உறுதியானது அல்ல. ஆந்திராவில் நாங்கள் நிறைவேற்றிய நலத்திட்டங்கள் மூலம் மீண்டும் நாங்கள் வெற்றிபெறுவோம்.

50 சதவீத விவிபாட் சீட்டுகளை எண்ண வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனில் கோரிக்கை விடுத்துள்ளோம். தேர்தல் முடிவுக்கு பின்னர் ஜனாதிபதியை சந்திப்பது குறித்தும் டெல்லி கூட்டத்தில் முடிவு செய்வோம்’’ என்றார்.

மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
கருத்துக்கணிப்புகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய, எந்திரங்களை மாற்ற சூழ்ச்சி நடப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என பா.ஜனதா பிரமுகர் பிரியங்கா சர்மா கூறியுள்ளார்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அரசியலமைப்பை இழிவுபடுத்துகிறார் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் வெள்ளம் நேரிட்டபோது என்ன செய்தீர்கள்? என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
மம்தா பானர்ஜிக்கு எதிராக கொள்கையின் ரீதியிலான மோதல் மட்டும்தான், தனிப்பட்ட முறையிலானது கிடையாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.