திருச்சியில் அமமுக வாக்குகளை பிரிப்பதால் திமுக கூட்டணிக்கு வாய்ப்பு - தந்தி டிவி
திருச்சியில் அமமுக வாக்குகளை பிரிப்பதால் திமுகவிற்கு வாய்ப்பு உள்ளது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
பதிவு: மே 19, 2019 20:41 PM மாற்றம்: மே 19, 2019 20:41 PM


திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடந்தது. ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை என 6 சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குள் அடங்கி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவனும், தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக சாருபாலா தொண்டைமான் மற்றும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி உள்பட சுயேச்சைகள் என 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

திருச்சி தொகுதியில் அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரிப்பதால் திமுக கூட்டணி வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிகிறது. இங்கு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 32-33  சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 28-34 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 20-26 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 5-8 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கலாம் என பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றியை தனதாக்கியுள்ளது.
உ.பி.யில் மகா கூட்டணி வியூகத்தை முறியடித்து பா.ஜனதா 60 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.
கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சபரிமலை விவகாரத்தை பெரிதும் எதிர்பார்த்த பா.ஜனதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.