கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடும் போட்டி - தந்தி டிவி கருத்துக்கணிப்பு
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் கடும் போட்டியிருக்கும் என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு: மே 19, 2019 19:39 PM மாற்றம்: மே 19, 2019 19:39 PM

 பா.ஜனதா சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கும் இடையே மிகவும் நெருக்கடியான போட்டி நிலவுகிறது. ஏப்ரல் 18-ம் தேதி மக்கள் வாக்களித்த பின்னர் அவர்களிடம் இருந்து யாரிடம் வாக்களித்தீர்கள் என கேட்டு அறியப்பட்ட கருத்துக்கணிப்பில் இருவருக்கும் இடையே ஒரு சதவிதம் மட்டுமே வேறுபாடு காணப்படுகிறது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு 40-46 சதவீதம் பேர் வாக்களித்ததாக கூறியுள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 39-45 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 5-8 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்திற்கு 4-7 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 3-6 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்