கொல்கத்தாவில் அமித்ஷாவின் பேரணியின் போது வன்முறை வெடிப்பு, போலீஸ் தடியடி
மேற்கு வங்காளத்தில் தேர்தல் தொடங்கியதில் இருந்து பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் இருந்து வருகிறது.
பதிவு: மே 14, 2019 20:14 PM மாற்றம்: மே 14, 2019 20:14 PM
கொல்கத்தாவில் அமித்ஷாவின் பேரணியின் போது வன்முறை வெடித்ததால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா கொல்கத்தாவில் இன்று வாக்கு சேகரிக்க சாலையில் வாகனத்தில் சென்றவாறு பேரணியை மேற்கொண்டார். கொல்கத்தா கல்லூரி சாலையில் கொல்கத்தா பல்கலைக்கழகம் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் நேரிட்டது. அமித்ஷாவை கொண்டாடிய பா.ஜனதா தொண்டர்கள் போலீசார் அமைத்திருந்த தடுப்பை உடைத்தனர். 

இதனால் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அமித்ஷாவிற்கு கருப்பு கொடிக் காட்டிக்கொண்டு, கோ பேக் அமித்ஷா, காவலாளியே திருடன் என கோஷமிட்டனர். இருதரப்பு மோதலில் வன்முறை வெடித்துள்ளது. வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். சிலர் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கும் சென்றுள்ளனர். இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கியுள்ளனர். அப்பகுதியில் பதட்டத்தை தணிக்க கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். 
மேலும் செய்திகள்