மோடி என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார், ஆனால் நான் அவரை அவமதிக்க மாட்டேன் - ராகுல் காந்தி
பிரதமர் மோடி என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார், ஆனால் நான் அவரை அவமதிக்க மாட்டேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பதிவு: மே 14, 2019 17:06 PM மாற்றம்: மே 14, 2019 17:06 PM
மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி வெறுப்புடன் பேசி வருகிறார். என்னுடைய தந்தை, பாட்டி, தாத்தாவை அவமானப்படுத்துகிறார். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் பிரதமர் மோடியின் தந்தை மற்றும்  தாயை நான் அவமதிப்பு செய்யும் வகையில் பேசியது கிடையாது. 

நான் உயிர் துறப்பேனே தவிர அவருடைய தாயையோ, தந்தையையோ அவமதிப்பு செய்ய மாட்டேன். ஏனென்றால் நான் பா.ஜனதா அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்தவன் கிடையாது. நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன். என் மீது அவமதிப்பு, வெறுப்பு வீசப்பட்டாலும் என்னிடம் இருந்து வெளிப்படுவது அன்பு மட்டுமே. நாங்கள் மோடியை அன்பால் வெல்வோம், கட்டியணைப்போம் எனக் கூறியுள்ளார். 

மேகங்கள் மற்றும் மாம்பழங்கள் பற்றி பேசப்படுகிறது தவிர எந்த விஷயத்தில் பிரச்சினைகள் பற்றி பேசப்படவில்லை என பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். 
மேலும் செய்திகள்