சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபுவை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்துள்ளார்.
பதிவு: மே 14, 2019 16:21 PM மாற்றம்: மே 14, 2019 16:49 PM
அமராவதி: 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசினார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஸ்டாலினை நேற்று சென்னையில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் தற்போது துரைமுருகன், ஆந்திர தலைநகர் அமராவதியில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் உடன் இருந்தார். சுமார் 20 நிமிடம் நடந்த சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பு குறித்து கூறிய துரைமுருகன் இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. மனைவி மகனுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் அமராவதியில் சென்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன் எனக் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
கரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை பெற்றுள்ளார். 10 சுற்றுகள் விவரம் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வெற்றி பெற்று தனது வலிமையை பா.ஜ.க. காட்டியுள்ளது.
சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேவையான எண்ணிக்கை கிடைக்காவிட்டால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்த ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.