தடுப்பை தாண்டிக் குதித்துச் சென்று மக்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி மத்தியப்பிரதேச மாநிலத்தில் போலீசார் பாதுகாப்புக்கு அமைத்திருந்த தடுப்பை தாண்டிக் குதித்துச் சென்று மக்களைச் சந்தித்தார்.
பதிவு: மே 14, 2019 12:28 PM மாற்றம்: மே 14, 2019 14:57 PM
தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி பல்வேறு மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லம் என்ற இடத்தில் மக்கள் கூட்டத்தினரிடம் இருந்து பிரித்து தடுப்புகளை அமைத்து பாதுகாப்பாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் திடீரென தடுப்பு வழியாக ஏறிக் குதித்து அவர் மக்களை சந்தித்தார்.

பிரியங்கா காந்தி தடுப்பின் மீது ஏறிக் குதித்ததால் பாதுகாவலர்களும் வேறு வழியின்றி தடுப்பின் மீது ஏறிக் குதித்து பாதுகாப்பு அளித்தனர்.

அதுபோல்  பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் தனக்கு எதிராக முழக்கமிட்டவர்களை காரிலிருந்து இறங்கி சென்று சந்தித்து அவர்களுடன் கை குலுக்கினார். காரிலிருந்து இறங்கிய அவர் கோஷமிட்டவர்களுக்கு கை கொடுத்துவிட்டு சிரித்து பேசிவிட்டு சென்றார். இதனால் அங்கு கோஷமிட்டு கொண்டிருந்தவர்கள் என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போய் நின்றனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்
மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
கரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை பெற்றுள்ளார். 10 சுற்றுகள் விவரம் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வெற்றி பெற்று தனது வலிமையை பா.ஜ.க. காட்டியுள்ளது.
சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேவையான எண்ணிக்கை கிடைக்காவிட்டால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்த ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.