நாட்டில் 70-க்கும் மேற்பட்ட கட்சிகளை உருவாக்கிய தாய் கட்சி காங்கிரஸ்
தாய் கட்சியாக விளங்கிய காங்கிரஸ் பல சக்தி வாய்ந்த மாநில கட்சிகளை உருவாக்கி உள்ளது.
பதிவு: மே 13, 2019 17:32 PM மாற்றம்: மே 13, 2019 17:55 PM
இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885-ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947-ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 15-வது இந்திய நாடாளுமன்றத்தில் 206 உறுப்பினர்களை பெற்றிருக்கும் இக்கட்சி, அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.

1885-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான். உமேஸ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன் ஆக்டவியன் குமே (Allan Octavian Hume), வில்லியம் வெட்டர்பர்ன் (William Wedderburn,), தாதாபாய் நௌரோஜி, தின்சா வாச்சா (Dinshaw Wacha) ஆகியோரால் தொடங்கப்பட்ட இதன் முதல் தலைவராக பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக் என்னும் கொள்ளை நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.

பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டது. இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907-ல் காங்கிரசில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது, லட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.

இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம் பிடித்த காங்கிரஸ் பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நவ்ரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற பல சிறந்த தலைவர்களை உருவாக்கியது.

காந்தி 1915-ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையருக்கு எதிராக அறவழிப்போர் நடத்தியதால் அவர் புகழ் இந்தியாவிலும் பரவியிருந்தது. தாயகம் திரும்பியதும் தன்னை இந்திய விடுதலைப்போரில் ஈடுபடுத்திக் கொண்டார். அறவழிப்பாதையை ஆதரித்தாலும் முதலாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். காங்கிரஸ் இயக்கம் அன்னி பெசன்ட் அவர்களின் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. இந்து முஸ்லிம் ஒற்றுமை வேண்டி காலிபத் இயக்கத்தை ஆதரித்தார். 1920-ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேருவின் மறைவுக்குப் பின், லால் பகதூர் சாஸ்திரியின் அரசில் இந்திய மேலவை உறுப்பினராக இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு தகவல் மற்றும் செய்தித்துறை அமைச்சராக பணியாற்றினார். லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மறைவையொட்டி பிரதமர் ஆனார். அதற்கு அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜரின் முயற்சியும் காரணமாகும். பின் 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினார்.

காங்கிரஸ் கொள்கைகளுக்கு மாறாக நடந்ததாக கூறி இந்திரா காந்தி , காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். இடதுசாரி கொள்கையுடன் இருந்து அவர்கள் பொருளாதார திட்டத்தை நிறைவேற்ற முயன்றது வலதுசாரி தலைவர்களுக்கு பிடிக்காததும் பிளவுக்கு காரணம் என கருதப்படுகிறது. இதனால் காங்கிரஸ் இரு குழுக்களாக பிரிந்தது. மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இந்திரா குழுவுக்கு ஆதரவளித்ததால் இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசிய காங்கிரஸ் என அறிவித்தது. அதனால் எதிர் குழு நிறுவன காங்கிரஸ் என்ற பெயரை சூட்டிக்கொண்டது.

காங்கிரஸ்,  பின்னர்  தோன்றிய 70 க்கு மேற்பட்ட  கட்சிகளுக்கு ஒரு ஆரம்ப தொட்டிலாக  விளங்கியது. அதில் இருந்து பல கட்சிகள் உருவாகி உள்ளன. பல உருவாகி மீண்டும் இணைந்து உள்ளன.  பல கட்சிகள் சக்திவாய்ந்த மாநில கட்சியாகவும் உள்ளன.  திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்  சக்திவாய்ந்தவைகளாக உள்ளன.

* 1923 ஆம் ஆண்டு ஸ்வராஜ் கட்சியை வங்காளத்தை அடிப்படையாக கொண்டு  சித்தரானன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் தொடங்கினர். பின்னர் காங்கிரசுடன் இணைந்தனர்.

*  1939 ஆம் ஆண்டு சர்துல் சிங் கவீஷார், ஷீல் பத்ரா யாகே, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர்  அனைத்திந்திய  பார்வர்டு பிளாக்  கட்சியை தொடங்கினர்.  இந்த கட்சி இன்றும் செயல்பட்டு வருகிறது.

* 1951 ஆம் ஆண்டு சவுராஷ்டிரா விவசாய கூட்டுறவு சங்கம் ( Saurashtra Khedut Sangh) நார்சிங்பாய் தஹ்தனியா ரதி பாய் பட்டாச்சார்யாவால் தொடங்கப்பட்டது. பின்னர் சுதந்திரா கட்சியுடன் இணைந்தது.

* 1951 கிசன் மஸ்தூர் பிரஜா கட்சி ஜிவத்ராம் கிருபாளினி என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் அது பிரஜா சோஷலிஸ்ட் கட்சி இணைந்தது.

* 1951 ஐதராபாத் மாநில பிரஜா கட்சி உருவானது.  பின்னர் கிசன் மஸ்தூர் பிரஜா கட்சியுடன் இணைக்கப்பட்டது.

* ராஜ கோபாலச்சாரியார் சென்னை மாகாணத்தை அடிப்படையாக கொண்டு  1956 -ல் இந்திய தேசிய ஜனநாயக காங்கிரசை உருவாக்கினார். பின்னர் இது சுவந்திர கட்சியுடன்  இணைந்தது.

* 1959 சுதந்திரா  கட்சி  1974 ஆம் ஆண்டு பாரதீய கிரந்தி தளத்துடன் இணைந்தது 

* 1964 கேரள காங்கிரஸ் - ஜனதா கட்சியுடன் இணைப்பு

* 1966 ஒரிசா மக்கள் காங்கிரஸ் - ஜனதா கட்சியுடன் இணைப்பு

* 1967 பங்களா காங்கிரஸ்  - ஜனதா கட்சியுடன் இணைப்பு

* 1967 பாரதீய கிரந்தி தளம்  - ஜனதா கட்சியுடன் இணைப்பு

* 1968 மணிப்பூர் மக்கள் கட்சி ( செயல்படுகிறது )

* 1969 உத்கல் காங்கிரஸ் - ஜனதா கட்சியுடன் இணைப்பு

*1969-  இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா)  ( இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசிய காங்கிரஸ் என அறிவித்தது. அதனால் எதிர் குழு நிறுவன காங்கிரசு என்ற பெயரை சூட்டிக்கொண்டது)

* 1969- இந்திய தேசிய காங்கிரஸ் (அமைப்பு)  காமராஜர், மொரார்ஜி தேசாயால் தொடங்கப்பட்டது. பின்னர் ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது.

* 1969- தெலுங்கானா பிரஜா  தொடங்கப்பட்டு பின்னர் காங்கிரசுடன் இணைந்தது

* 1977 - ஜனநாயகத்திற்கான காங்கிரஸ்  தொடங்கப்பட்டு  ஜனதா கட்சியுடன் இணைந்தது

* 1978- இந்திய தேசிய காங்கிரஸ் (இந்தியா)  தேர்தல் ஆணையத்தால்  1983 ஆம் ஆண்டில்  இந்திய தேசிய காங்கிரசாக  அங்கீகரிக்கப்பட்டது.

* 1979 இந்திய தேசிய காங்கிரஸ் (அர்ஸ்) செயல் இழந்தது

* 1980 காங்கிரஸ் ( ஏ)  ஏ.கே. அந்தோணியால் தொடங்கப்பட்ட பின்னர் காங்கிரசில் இணைந்தது

* 1981 இந்திய தேசிய காங்கிரஸ் (சோசலிஸ்ட்) தொடங்கப்பட்டு  பின்னர் காங்கிரசுடன் இணைந்தது

* 1981- இந்திய தேசிய காங்கிரஸ் (ஜெகஜீவன்) செயல் இழந்தது

* 1984- இந்திய காங்கிரஸ் (சோசலிஸ்ட்) - சரத் சந்திர சிங்ஹா  தேசியவாத காங்கிரசுடன் இணைந்தது

*  1986 ராஷ்ட்ரிய சமாஜ்வாதி காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியால் தொடங்கப்பட்டு பின்னர் காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.  

* 1988 தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சி நடிகர் சிவாஜி கணேசனால் தொடங்கப்பட்டு பின்னர் ஜனதா தளத்துடன் இணைக்கப்பட்டது.

* 1990 அரியானா விகாஸ் கட்சி தொடங்கப்பட்டு பின்னர் காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.

* 1994 அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி)  தொடங்கப்பட்டு பின்னர் காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.

* 1994  வாழப்பாடி ராமமூர்த்தியால் தமிழக  ராஜீவ் காங்கிரஸ் என்ற கட்சி தொடங்கப்பட்டு பின்னர் காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.

* 1994 கர்நாடக காங்கிரஸ் கட்சி பங்காரப்பாவால் தொடங்கப்பட்டு பின்னர் காங்கிரசுடன் இணைந்தது.

* 1996 தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே மூப்பனாரால் தொடங்கப்பட்டு பின்னர் காங்கிரசுடன் இணைக்கப்பட்டது. 

* 1996 மத்திய பிரதேச விகாஸ் காங்கிரஸ் - காங்கிரசுடன் இணைந்தது

*1996 அருணாசல காங்கிரஸ் - காங்கிரசுடன் இணைக்கப்பட்டது

* 1997 திரிணாமுல் காங்கிரஸ்  மம்தா பானர்ஜியால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

* 1997 தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ் செயல் இழந்தது

* 1997 மணிப்பூர் காங்கிரஸ் கட்சி  - ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் இணைப்பு

* 1997 இமாச்சல் விகாஸ் காங்கிரஸ்  காங்கிரசுடன் இணைப்பு

* 1998 அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (மதச்சார்பற்ற) - காங்கிரசுடன் இணைப்பு

* 1998 மகாராஷ்டிரா விகாஸ் ஆகாடி - கங்கிரசுடன் இணைப்பு

* 1998 கோவா ராஜீவ் காங்கிரஸ் கட்சி - தேசியவாத காங்கிரசுடன் இணைப்பு

*1998 அருணாச்சல காங்கிரஸ் (மிதி)  - காங்கிரசுடன் இணைப்பு

*  1999 தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத்பவார்  தொடங்கினார் - செயல்பாட்டில் உள்ளது.

* 1999  ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி செயல்பட்டு வருகிறது

* 1999- பாரதீய ஜன காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசுடன் இணைப்பு

* 2000 கோவா மக்கள் காங்கிரஸ் - காங்கிரசுடன் இணைப்பு

* 2001 ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயக பேரவை - காங்கிரசுடன் இணைப்பு

* 2001 குமரி அனந்தனின் தொண்டர் காங்கிரஸ் - காங்கிரசுடன் இணைப்பு

*  2001 புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் செயல் இழந்தது

*   2002 விதர்பா ஜனதா காங்கிரஸ் செயல்பாட்டில் உள்ளது

* 2002 குஜராத் ஜனதா காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசுடன் இணைப்பு

* 2002 இந்திய தேசிய காங்கிரஸ் (ஷேக் ஹசன்) - பாரதீய ஜனதாவுடன் இணைப்பு

* 2003 நாகாலாந்து மக்கள் முன்னணி செயல்பாட்டில் உள்ளது 

* 2003 காங்கிரஸ் (டோலோ)- பாரதீய ஜனதாவுடன் இணைப்பு

* 2005 புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் - காங்கிரசுடன் இணைப்பு

* 2005 ஜனநாயக இந்திரா காங்கிரஸ் (கருணாகரன்) கட்சி தேசியவாத காங்கிரசுடன் இணைந்தது. மகன் முரளிதரனும், தொண்டர்களும் காங்கிரஸ் திரும்பினர்.

* 2007 அரியானா ஜனஹிட் காங்கிரஸ் (பிஎல்) - காங்கிரசுடன் இணைப்பு

* 2008 பிரகாதிஷெல் இந்திரா காங்கிரஸ் (பிஐசி) -  திரிணாமுல் காங்கிரசுடன்  இணைப்பு

*  2011 அனைத்திந்திய என்.ஆர். காங்கிரஸ் செயல்பாட்டில் உள்ளது.

* 2011 ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்  செயல்பாட்டில் உள்ளது.

* 2014  தமிழ் மாநில காங்கிரஸ் செயல்பாட்டில் உள்ளது

* 2014  ஜெய் சமாய்க்சந்திரா கட்சி - காங்கிரசுடன் இணைப்பு

* 2016 சத்தீஸ்கார் ஜனதா காங்கிரஸ் செயல்பாட்டில் உள்ளது
மேலும் செய்திகள்