திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு
சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார்.
பதிவு: மே 13, 2019 16:56 PM மாற்றம்: மே 13, 2019 16:56 PM
சென்னை,

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திருச்சியில் தான் தங்கியிருந்த அறையிலிருந்து கிளம்பி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார்.

கோபுர வாயிலில் அறநிலையத்துறை சார்பில் மாலை அணிவித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பேட்டரி கார் மூலம் கோவிலுக்குள் சென்ற அவர், அதன் பின்னர் சிறிது தூரம் நடந்து சென்று, சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீரங்கம் வரவேண்டும் என்ற தனது நெடுநாள் கனவு நிறைவேறியதாக தெரிவித்தார்.

பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தார். சந்திப்பின் போது துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்