நான் "ஜெய் ஸ்ரீராம்" சொல்கிறேன்... என்னை கைது செய்யட்டும் : மம்தாவிற்கு அமித்ஷா சவால்
மேற்கு வங்காளத்தில் நான் "ஜெய் ஸ்ரீராம்" என சொல்கிறேன். என்னை கைது செய்யட்டும் என மம்தாவிற்கு அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.
பதிவு: மே 13, 2019 14:59 PM மாற்றம்: மே 13, 2019 14:59 PM
மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றுவிட்டு மம்தா பானர்ஜி காரில் திரும்பிய போது பா.ஜனதாவினர் "ஜெய் ஸ்ரீராம்" என முழக்கமிட்டனர். அப்போது கோபத்தில் காரிலிருந்து இறங்கிய மம்தா பானர்ஜி, இங்கே வாங்க என பா.ஜனதாவினரை அழைத்தார். ஆனால் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இச்சம்பவத்தை அடுத்து "ஜெய் ஸ்ரீராம்" என்ற முழக்கத்தை வைத்து பா.ஜனதா பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

மேற்கு வங்காளத்தில் பிரசாரம் செய்த போது பிரதமர் மோடி, நான் இங்கு "ஜெய் ஸ்ரீராம்" என முழக்கமிடுகிறேன், என்னை கைது செய்யட்டும் என மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்தார். இப்போது அமித்ஷாவும் இதுபோன்ற சவாலை விடுத்துள்ளார். 

ஜாய்நகர் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்யும் போது, “யாராவது ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டால் மம்தா பானர்ஜிக்கு கோபம் வருகிறது. இப்போது இங்கு நான் ஜெய் ஸ்ரீராம் என சொல்கிறேன். உங்களுக்கு (மம்தா பானர்ஜி) தைரியம் இருந்தால், என்னை கைது செய்யுங்கள். நாளை வரையில் கொல்கத்தாவில்தான் இருப்பேன்” என கூறினார்.