மே.வங்க முதல்வர் மம்தா அரசியலமைப்பை இழிவுபடுத்துகிறார் : மோடி கடும் தாக்கு
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அரசியலமைப்பை இழிவுபடுத்துகிறார் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
பதிவு: மே 09, 2019 13:36 PM மாற்றம்: மே 09, 2019 13:36 PM
பன்குரா, 

என்னை பிரதமராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறியதன் மூலம் இந்திய அரசியலமைப்பை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இழிவுபடுத்துகிறார் என்று பிரதமர் மோடி விமர்சித்தார். 

மேற்கு வங்காளத்தில் உள்ள பன்குரா பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:- “ நாட்டின் தலைவராக பிரதமரை நான் ஏற்க மாட்டேன் என்று வெளிப்படையாக மம்தா பானர்ஜி அறிவிக்கிறார். ஆனால், இம்ரான் கானை பாகிஸ்தான் பிரதமராக பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறார். பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற வெறுப்பில், இந்திய அரசியலமைப்பை மம்தா பானர்ஜி இழிவுபடுத்துகிறார்.  

புயலின் போது எனது தொலைபேசி அழைப்பை மம்தா பானர்ஜி ஏற்றுக்கொள்ளவில்லை. அதிகாரிகளுடன் இணைந்து புயல் பாதிப்புகள் பற்றி விவாதிக்க மத்திய அரசு விரும்பியது. ஆனால், இதற்கு கூட சகோதரி (திதி) அனுமதிக்கவில்லை மாநிலத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறை மம்தாவுக்கு இல்லை. ஆனால், தனது குடும்பத்தினரை வளப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே உள்ளது” என்றார். 
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கருத்துக்கணிப்புகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய, எந்திரங்களை மாற்ற சூழ்ச்சி நடப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என பா.ஜனதா பிரமுகர் பிரியங்கா சர்மா கூறியுள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் வெள்ளம் நேரிட்டபோது என்ன செய்தீர்கள்? என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
மம்தா பானர்ஜிக்கு எதிராக கொள்கையின் ரீதியிலான மோதல் மட்டும்தான், தனிப்பட்ட முறையிலானது கிடையாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.