டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.
பதிவு: மார்ச் 29, 2019 07:51 AM மாற்றம்: மார்ச் 29, 2019 07:51 AM
புதுடெல்லி,

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் தலைமையில் அ.ம.மு.க. போட்டியிடுகிறது.  கட்சி பதிவு செய்யப்படாத நிலையில், இந்த கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.  பொது சின்னம் வழங்கலாம் என தேர்தல் ஆணையத்திடம் கூறியது.

இதனை தொடர்ந்து, புதுடெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் தினகரன் தரப்பில் பொது சின்னம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.  இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ள நிலையில், டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரே சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகள்