தேமுதிகவின் நிலைமையை பார்த்து பரிதாபப்படுகிறேன் - துரைமுருகன்
தேமுதிகவின் நிலைமையை பார்த்து பரிதாபப்படுகிறேன் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
பதிவு: மார்ச் 07, 2019 14:23 PM மாற்றம்: மார்ச் 07, 2019 14:23 PM
சென்னை,

சுதீஷ் பேட்டி குறித்து  திமுக பொருளாளர்  துரைமுருகன் விளக்கம் அளித்து கூறியதாவது;-

தேமுதிகவின் மோகன் ராஜ், சுதீஷ் ஆகியோர் என்னுடைய நண்பர்கள்.  நேற்று என்னிடம் சுதீஷ் போனில் பேசினார். பின்னர் தேமுதிக நிர்வாகிகள் இரண்டு பேர் வந்து என்னை சந்தித்தனர். ஆனால் அவர்களை எனக்கு தெரியாது.  நீங்கள் வந்தது உங்கள் தலைவருக்கு தெரியுமா என்றேன், தலைவர் சொல்லியே வந்தோம் என கூறினார்கள்.

தேமுதிக நிர்வாகிகள் தங்களை காப்பற்றிக் கொள்ளவே தற்போது  இப்படி கூறி உள்ளார்கள். அதிமுகவுடன் கூட்டணி சேர்வதற்காக என்னை பற்றி பேசுகிறார்கள். தேமுதிகவின் நிலைமையை பார்த்து பரிதாபப்படுகிறேன் என கூறினார்.
மேலும் செய்திகள்