வாக்காளர்கள் | : | | 63800160 |
ஆண் | : | | 34121296 |
பெண் | : | | 29676576 |
திருநங்கை | : | | 2288 |
பீகார் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா.
2000-ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் சில பகுதிகளை பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 94,163 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 104,099,452 ஆக உள்ளது.
பீகார் 40 பாராளுமன்ற தொகுதிகளை கொண்டது.243 சட்ட சபை தொகுதிகளை கொண்ட மாநிலம் ஆகும்.
பல மாநிலங்கள் இன்று ஜாதி அரசியலில் சிக்கி தவித்தாலும் இதில் முன்னோடி மாநிலமாக இருப்பது பீகார்.
அங்கு ஜாதி ரீதியான கூட்டல்– கழித்தல் கணக்குகள்தான் வெற்றி– தோல்வியையும் நிர்ணயிக்கின்றன.
அந்த மாநிலத்தில் ஜாதி அரசிய லுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் லல்லுபிரசாத் யாதவ்.
அங்கு 1990–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததும் லல்லு பிரசாத் யாதவ் முதல்–மந்திரி ஆனார். அவர் சார்ந்த யாதவ சமுதாயத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், முஸ்லிம்கள் அவரது ஆதரவாளராக இருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட லல்லு பிரசாத் யாதவ் அடுத்த தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கி
ஆட்சியை பிடித்தார்.
அந்த நேரத்தில் உயர் ஜாதியினர் பிற்படுத்தப்பட்டோரில் ஒரு பிரிவினர், தலித்துக்கள் போன்றவர்களும் காங்கிரஸ், பாரதீய ஜனதா என வேறு கட்சிகளின் ஆதரவாளராக மாறினார்கள். அதில் இருந்து இன்று வரை ஜாதி அரசியலை பின்னணியாக கொண்டேஅங்கு அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது.
இப்போது அங்கு நடக்கும் பாராளு மன்ற தேர்தலிலும்கூட இதே ஜாதி அரசியல்தான் எதிரொலிக்கிறது. பாரதீய ஜனதாவும், மாநில ஆளும்
கட்சியாக உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், ஒரு அணியில் நிற்கின்றன. மறுபக்கம் காங்கிரசும், லல்லு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளமும் கூட் டணி அமைத்துள்ளன.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. அங்குள்ள அனைத்து கட்சிகளும் இந்த இரு கூட்டணியில் ஏதாவது ஒன்றில்
ஐக்கியமாகி இருக்கின்றன.
ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி உபேந்திர குஷ்வகாவின் ராஷ்டீரிய லோக் சமதா கட்சி, முன்னாள் முதல்–மந்திரி மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம்
மோர்ச்சா கட்சி, முகேஷ் ஷானியின் விகாசில் இன்சான் கட்சி ஆகியவை காங்கிரஸ்–லல்லு பிரசாத் கட்சி அணியில் இடம் பெற்று உள்ளன.
இரு பக்கமும் வலுவான கூட்டணியாக அமைந்துள்ளன. கூட்டணியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே
பிரதான கட்சிகள் இந்த தடவை போட்டி யிடும் தொகுதியை கூட குறைத்து கொண்டு கூட்டணி கட்சிகளுக்கு விட்டு
கொடுத்துள்ளன.
பாரதீய ஜனதா கட்சி தன்வசம் உள்ள 5 எம்.பி. தொகுதியை ஐக்கிய ஜனதா தளத்துக்கு விட்டு கொடுத்துள்ளது. அதே
போன்று மற்ற கட்சிகளும் தாராளமாக விட்டு கொடுத்து இருக்கின்றன.
லல்லு கட்சி இதற்கு முன்பு எந்த தேர்தலிலுமே 25–க்கு குறைவான தொகுதிகளில் போட்டியிட்டதே இல்லை.ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடம் ஒதுக்க வேண்டியது இருந்ததால் 19 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. அதிகபட்சமாக காங்கிரசுக்கு 9 இடங்களை ஒதுக்கி
இருக்கிறது.
பீகாரில் மொத்த மக்கள் தொகை 10 கோடியே 38 லட்சம். இதில் 41 சதவீதத் தினர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச சேர்ந்தவர்கள். 25 சதவீதத்தினர் உயர் ஜாதியினர். இவர்கள் தவிர 17 சதவீதம் முஸ்லிம்களும், 15 சதவீத தலித்துகளும் உள்ளனர்.
லல்லுபிரசாத், நிதிஷ்குமார் இருவருமே பிற்படுத்தப்பட்டோர் சமூ கத்தைச் சேர்ந்தவர்கள். இதில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் லல்லு
பிரசாத். குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர் நிதிஷ்குமார். யாதவ சமூகத்தினர் மட்டும் 14 சதவீதம் பேர் உள்ளனர். குர்மி சமூகத்
தினர் 4 சதவீதம் பேர் உள்ளனர். லல்லு – நிதிஷ்குமார் இருவருக்குமே அவர்கள் சார்ந்த சமூகத்தினர் ஆதரவாக உள்ள னர்.
முஸ்லிம்களில் பெரும்பான்மையா னோர் லல்லு பிரசாத்துக்கும், ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் சமுதாயத்தினர் நிதிஷ்குமாருக்கும் ஆதரவாக இருந்தனர். இப்போது பாரதீய ஜனதாவுடன் நிதிஷ் குமார் கூட்டணி அமைத்து இருப்பதால் முஸ்லிம் ஆதரவை முற்றிலும் இழக்கும்
நிலையில் உள்ளார். அது லல்லு அணி பக்கம் சென்று விடும்.
பிற்படுத்தப்பட்டோரில் குஷ்வகா என்ற சமூகத்தினர் 8 சதவீதம் உள்ளனர். அவர்கள் முன்னாள் மத்திய மந்திரி உபேந்திர குஷ்வகா வின் ராஷ்டீரிய லோக் சமதா கட்சிக்கு ஆதரவாக உள்ள னர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. அதன் மூலம் 3 எம்.பி.
தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் இந்த தடவை அந்த கூட்டணியில் இருந்து வெளியேவந்து லல்லு அணியுடன் கை
கோர்த்து உள்ளது.
மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ் வானின் லோக் ஜனசக்தி கட்சி, முன்னாள் முதல்–மந்திரி மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி ஆகிய இரண்டுக்கும் தலித மக்கள் ஆதரவாளர்களாக உள்ளனர்.
இவர்களில் ராம்விலாஸ் பஸ்வான் பாரதீய ஜனதா கூட்டணியிலும், மாஞ்சி லல்லு கூட்டணியிலும் இடம் பெற்றுஉள்ளனர். இதனால் தலித் ஓட்டுகள் இரு அணிகளுக்குமே பிரியும் நிலை உள்ளது.
முஸ்லிம் ஓட்டுக்களை ஒட்டு மொத்த மாக லல்லு கட்சி கூட்டணி அள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பீகாரில் ராஜபுத்திரரர்கள், பூமிகார், காயஸ்தர்கள், பிராமணர்கள் போன்ற உயர் ஜாதியினர் 25 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் எல்லோருமே பாரதீய ஜனதா ஆதரவாளர்களாக உள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு ஜாதியினரும் ஒவ் வொரு கட்சியின் பின்னால் நிற்
பதால் அவர்களின் ஆதரவு அடிப்படை யில்தான் வெற்றி–தோல்வி அமையும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடியின் அலை பீகாரிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது அந்த கட்சி ராம்விலாஸ் பஸ்வான், குஷ்வகா கட்சிகளுடன் கூட்டணி
அமைத்து போட்டியிட்டது.
மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாரதீய ஜனதா 22 இடங்களிலும், ராம்விலாஸ் பஸ்வான் கட்சி 6 இடங்களிலும், குஷ்வகா கட்சி 3 இடங் களிலும் வென்றன. தனியாக போட்டி யிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்களில் வென்றது. ராஷ்டீரிய ஜனதா தளம் 4 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
பீகாரை போஜ்பூர், சாம்பரன், கோசி, மதிலாஞ்சல், பாடலிபுத்ரா, சீமாஞ்சல் என 6 மண்டலங்களாக பிரிக்கிறார்கள். இதில் கடந்த தேர்தலில் போஜ்பூர், சாம்பரன், மதிலாஞ்சல் ஆகிய 3 மண்டலங்களில் பாரதீய ஜனதா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
கடந்த தேர்தலில் ஒட்டு மொத்த மண்ட லங்களிலும் சேர்த்து பாரதீய ஜனதா மட்டும் தனியாக 29 சதவீத ஓட்டுகளை பெற்றது. இதன் கூட்டணி கட்சியான லோக் ஜன சக்தி 6 சதவீத ஓட்டுகளையும், குஷ்வகா கட்சி 3 சதவீத ஓட்டுகளையும் பெற்று இருந்தன. அந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் 6 சதவீத ஓட்டுகளை பெற்று இருந்தது.
ராஷ்டீரிய ஜனதா தளம் 20 சதவீத ஓட்டுகளையும், கூட் டணி கட்சியான காங்கிரஸ் 8 சதவீத ஓட்டு களையும் பெற்றுஇருந்தன. ஆனால் இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி ஏற்படுத்தி இருக்கின்றன.கடந்த தேர்தலை ஒப்பிடும் போது இந்த இரு கட்சி களின் ஓட்டு மட்டுமே 45 சதவீதமாக உள்ளது. இத்துடன் ராம்விலாஸ் பஸ்வான் கட்சியின்
6 சதவீத ஓட்டுகளும் சேரும் போது பாரதீய ஜனதா கூட்டணியின் ஓட்டு 51 சதவீதமாகி விடுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ்–லல்லு
கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஒட்டு மொத்த ஓட்டு 35 சதவீதம் அளவுக் குதான் உள்ளது. எனவே கூட்டணி பலத்தால் பாரதீய ஜனதா பெரும் வெற்றி அடையும் என்று அந்த கட்சியினர் கூறு கிறார்கள்.
ஆனால் கடந்த தேர்தலில் மோடி அலை இருந்தது. ஆனால் இப்போது மோடி அலை இல்லை. மேலும் மத்திய–மாநில இரு ஆளும் கட்சிகள் மீதும் அதிருப்தி நிலவுகிறது. எனவே பாரதீய ஜனதா கடந்த தேர்தலை போல வெற்றி பெற முடியாது என்று லல்லு கட்சியினர் கூறுகின்றனர்.
தீவிரவாதிகள் தாக்குதல் அதற்கு பதிலடியா இந்தியா பாகிஸ்தானில் நடத்தியக விமான தாக்குதல் ஆகியவை மோடியின் செல்வாக்கை பீகாரில் அதிகப்பபடுத்தியுள்ளது. இது பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கிறார்கள்.
மேலும் மத்திய அரசின் திட்டங்களான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம், ஏழைகளுக்கு சமையல் கியாஸ் திட்டம், கழிப்பிடம் கட்டும் திட்டம், மாநில அரசு கொண்டு வந்துள்ள வளர்ச்சி திட்டங்கள் தங்கள் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியினர் சொல்கிறார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள உயர்ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் உயர்ஜாதியினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். எனவே இது பாரதீய ஜனதாவுக்கு சாதகத்தை ஏற்படுத்தும் அதே நேரத்தில் மற்றொரு பக்கம் பாதகத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது இங்கு இரு அணிகளும் கடும் சவாலுடன் போட்டியை சந்திக்கின்றன. இதில் யார் முந்துவார்கள்? வாக்காளர் என்ன மனநிலையில் இருக்கிறார்கள்? என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக பீகார் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த லல்லு பிரசாத் முதல் முறையாக இந்த தடவை நேரடி அரசியல் களத்தில் இல்லை. அவர் கால்நடை தீவன வழக்கில் ஜெயிலில் இருப்பதால் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. லல்லு பிரசாத் அந்த கட்சியின் நட்சத்திர பிரசாரகர் ஆவார். அவருக்கென்று தனி செல்வாக்கு உண்டு. அவர் பிரசாரம் செய்யாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லல்லுவின் பணியை அவரது மகன் தேஜஸ்வி செய்கிறார். அது எந்த
அளவுக்கு எடுபடும் என்று தெரிய வில்லை. லல்லு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் அனுதாபம் ஏற்படலாம். இது அந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்று லல்லு கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள்.
நடிகர் சத்ருகன்சின்கா பீகாரில் பாரதீய ஜனதாவின் முக்கிய பிரமுகராக இருந்து வந் தார். அவர் பாட்னாசாகிப் எம்.பி. தொகுதி யில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றியும் பெற்று வந்தார். ஆனால் பா.ஜனதாவில் ஏற்பட்ட அதிருப்தியால் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக அதே தொகுதி யில் போட்டியிடுகிறார்.அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் பீகாரில் பலம் வாய்ந்த நபராக உள்ள மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை பாரதீய ஜனதா வேட்பாளராக அந்த தொகுதியில் நிறுத்தியுள்ளது. இது சத்ருகன்சின்கா வெற்றிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாநில பாஜக பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.
பாட்னா தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவடா எம்பி கிரிராஜ் இந்த முறை பெகுசராய் தொகுதியில் போட்டியிடுகிறார். பாடலிபுத்திரத்தில் ராம்கிரிபால் யாதவ், அர்ராஹ் தொகுதியில் ஆர்.கே.சிங், புக்சார் தொகுதியில் அஸ்வனி சவுபே, கிழக்கு சம்பரன் தொகுதியில் ராதா மோகன் சிங், சரன் தொகுதியில் ராஜீவ் பிரதாப் ரூடி போட்டியிடுகின்றனர்.
லோக் ஜனசக்தி கட்சியின் சந்தன் குமார் நவடா தொகுதியிலும், சிரக் பஸ்வான் ஜமுய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.