வாக்காளர்கள் | : | | 0 |
ஆண் | : | | 0 |
பெண் | : | | 0 |
திருநங்கை | : | | 0 |
புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் மாநகரப்பகுதியானது அரியானாவிலுள்ள ஃபரிதாபாத், குர்கான் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள நோய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.
இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற கட்டிடக்கலை வல்லுநர்களான சர் எட்வின் லூட்டியன்சும் சர் எர்பெர்ட்டு பேக்கரும் வடிவமைத்து உருவாக்கினர். புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு புது தில்லி என 1927ல் பெயர் சூட்டப்பட்டு பின்னர் இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
புது தில்லியிலுள்ள உமாயூனின் சமாதியும், செங்கோட்டையும், குதுப்பின் வளாகமும் உலகப் பாரம்பரியக் களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.
புது தில்லி இந்தியாவின் நுண்ணுயிராகவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலும் உலகநாடுகளுக்கு நிகராக முன்னேறியுள்ளது.
மேலும், 21 மில்லியன் மக்கள் தொகையோடு நாட்டின் அதிக மக்கள் கொண்ட மாநகரப் பட்டியலில் முதன்மையாகவும், நகரமைப்பில், 23 மில்லியன் மக்கள் தொகையோடு, உலக மக்கள்தொகை பட்டியலில் ஏழாவதாகவும் விளங்குகிறது.
அமெரிக்க ஆலோசனை நிறுவனமான மெர்சரின் ஆய்வுப்படி, உலகின் விலையுயர்ந்த வாழ்வாதாரத்தைக் கொண்ட 214 நகரங்களில், புது தில்லி 113வது இடத்தைப் பிடித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த லாக்பராக் பல்கலைப்பழகம், புது தில்லியை தங்களது தலையாய உலக நகரங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது.
2011 இல் லண்டன் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனமான நைட் ப்ராங்கின் உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் 37வது இடத்தையும் பிடித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
முக்கிய வேட்பாளர்கள் பெயர் மற்றும் பெற்ற வாக்குகள்:
மீனாட்சி லெகி -504206(பா.ஜ.க) (வெற்றி)
அஜய் மேகேன் -247702(காங்கிரஸ்)
பிரிஜிஷ் கோயல் -150342(ஆம் ஆத்மி கட்சி)
உபேன்ரா -1281(அன்ஜான் ஆம் ஆத்மி கட்சி)
அஜய்குமார் லால் -639(சுயேட்சை)
ஆஷிஸ் சக்சேனா -198(சுயேட்சை)
கிரிபாஷங்கர் பாண்டே-184(சுயேட்சை)
திலிப்சிங் கதோரி -255(சுயேட்சை)
ப்ரியங்கா -289(சுயேட்சை)
ரமேஷ் -200(சுயேட்சை)
ராமமூர்த்தி -238(சுயேட்சை)
சுரேஷ்குமார் -721(சுயேட்சை)
ஹரிகிரிஷ்னன்தாஸ்-610(சுயேட்சை)
நோட்டா -6601
மொத்தம் பதிவான வாக்குகள் -920541